Home
Mobile

ஸ்மார்ட்போன் சந்தையை அதிர வைத்த டூயல் லெய்கா லென்ஸ்.!!

By Meganathan

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் கருவிகள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், புதிய வகை ஹார்டுவேர் மற்றும் தலைசிறந்த அம்சங்கள் கொண்ட கருவிகளும் அதீத வரவேற்பைப் பெறுகின்றன. பல்வேறு ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் இந்தியாவில் ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகின்றது.

அந்த வகையில் புதுவித ஹார்டுவேர் அல்லது மென்பொருள் சார்ந்த அம்சங்களை அறிமுகம் செய்வதில் பெயர் பெற்ற நிறுவனமாக ஹூவாய் இருக்கின்றது. சரியான கோணத்தில் ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் சார்ந்து சிறப்பான பயனர் அனுபவத்தை ஹூவாய் வழங்கி வருகின்றது.

உலகளவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமை பெறுவதில் அதீத ஆர்வம் காட்டி வரும் ஹூவாய் தொழில்நுட்ப சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் ஹூவாய் தனது ஒவ்வொரு கருவியிலும் புதுமையைப் புகுத்தி வருகின்றது.

ஹூவாய்

ஹூவாய்

ஹூவாய் சார்பில் வெளியான கருவி தான் பி9 . அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் கருவியான இது இந்திய சந்தையில் ரூ.39,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அழகிய வடிவமைப்பு, தலைசிறந்த அம்சங்கள் அனைத்தும் வழங்கப்பட்ட நிலையிலும் கேமரா எனும் ஒற்றை அம்சம் கொண்டு மற்ற நிறுவனங்களைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

டூயல்-கேமரா

டூயல்-கேமரா

டூயல்-கேமரா செட்டப் கொண்டிருக்கும் ஹூவாய் பி9 அதிக துல்லியம் கொண்ட புகைப்படங்களை வழங்குகின்றது. கேமரா அம்சத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது லெய்கா லென்ஸ் எனலாம். கேமரா உபகரண தயாரிப்பில் முன்னணி நிறுவனமான லெய்கா ஹூவாய் பி9 கேமராவின் பக்கபலமாக இருக்கின்றது.

லெய்கா

லெய்கா

பி9 கருவியைப் பொருத்த வரை ஹூவாய் லெய்கா நிறுவனத்துடன் இணைந்து அதிக தரம் கொண்ட கேமராவினை வழங்கியுள்ளது. லெய்கா கேமரா கொண்டிருக்கும் ஹூவாய் பி9 அனைவரையும் கவர்ந்துள்ளது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை ஹூவாய் பி9 கருவியில் 12 எம்பி பிரைமரி கேமரா, 1.25 மைக்ரான் பிக்சல் கொண்ட லெய்கா SUMMARIT லென்ஸ் வழங்கியுள்ளது. இதன் மூலம் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். டூயல் கேமரா கொண்ட பி9 கேமராவில் ஒன்று டெப்த் ஆஃப் ஃபீல்டு சென்சார் கொண்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து அதனினை மட்டும் துல்லியமாக காட்ட முடியும்.

பொக்கே எஃபெக்ட்

பொக்கே எஃபெக்ட்

வித்தியாசமான புகைப்படங்களை எடுக்கும் போது ஃபோகஸ் பாயிண்ட்களில் மாற்றங்களைச் செய்ய முடியும். இதோடு விலை உயர்ந்த கேமராக்களில் மட்டுமே கிடைக்கும் பொக்கே எஃபெக்ட் போன்றவற்றையும் பெற முடியும்.

Best Mobiles in India

English summary
Huawei P9 with the dual Leica lens sets new camera standards, disrupts smartphone market
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X