Home
Mobile

ஹூவாய் பி9 மற்றும் கேலக்ஸி எஸ்7 : பட்டையைக் கிளப்பும் போட்டி எது சிறந்தது.??

By Meganathan

ஹூவாய் நிறுவனம் பி9 எனும் பிளாக்ஷிப் கருவியினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ரூ.39,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஹூவாய் பி9 சக்திவாய்ந்த அம்சங்களோடு அதிநவீன கேமராவையும் வழங்கியுள்ளது.

ஹூவாய் பி9 / கேலக்ஸி எஸ்7 : பட்டையைக் கிளப்பும் போட்டி எது சிறந்தது.??

ஹூவாய் பி9 கருவியானது லெய்கா நிறுவனத்தின் கேமரா மூலம் சக்தியூட்டப்பட்டுள்ளது. இந்த விலைப் பட்டியலில் ஹூவாய் நிறுவனம் டூயல் கேமரா செட்டப் வழங்கியுள்ளது, மற்ற நிறுவனங்களை விடத் தனித்துவம் வாய்ந்ததாக வெளிப்படுத்துகிறது.

அந்த வகையில் ஹூவாய் பி9 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்7 கருவிகளில் எது சிறந்த கருவி என்பதைப் பற்றி இங்குத் தெரிந்து கொள்ளுங்கள். சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்7 பிளாக்ஷிப் கருவியினை ரூ.48,900 என்ற விலையில் அறிமுகம் செய்தது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஹூவாய் புதிய பி9 கருவியில் 5.2 இன்ச் FHD டிஸ்ப்ளே 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்7 கருவியில் சற்றே சிறிய டிஸ்ப்ளே அதாவது 5.1 இன்ச் திரை வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர் வேகம்

பிராசஸர் வேகம்

ஹூவாய் பி9 கருவியில் கிரின் 955 SoC ஆக்டா கோர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் 64-பிட் ARM சார்ந்த பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிராஸர் மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக்கப் வழங்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்7 கருவியில் எக்சைனோஸ் 8890 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

இரு கருவிகளிலும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஹூவாய் பி9 கருவியில் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இரு கருவிகளும் சிறந்த மெமரி ஆப்ஷன்களை வழங்கியுள்ளன.

கேமரா

கேமரா

ஹூவாய் பி9 கருவில் டூயல்-லென்ஸ் கேமரா மற்றும் லெய்கா லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 12 எம்பி டூயல் கேமராவும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்7 கருவியில் 12 எம்பி சிங்கில் லென்ஸ் கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

இரு ஸ்மார்ட்போன்களும் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன. ஹூவாய் கிரின் 955 சிப்செட் நீண்ட நேர பேக்கப் வழங்குவதோடு பேட்டரி சேவிங் மோட் மற்றும் குவிக் சார்ஜ் அம்சம் வழங்கப்பட்டுள்ளன. கேலக்ஸி எஸ்7 கருவியிலும் பேட்டரி சேவிங் மோட் மற்றும் குவிக் சார்ஜ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Huawei P9 with Dual Leica camera takes the competition against Samsung Galaxy S7 to another level
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X