Home
Mobile

சக்தி வாய்ந்த கேமரா ஸ்மார்ட்போன் ஹூவாய் பி9.!!

By Meganathan

ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய் நிறுவனம் புதுவகை தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் பெயர் பெற்றுள்ளது. அந்நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூவாய் பி9 எனும் ஸ்மார்ட்போன் கருவியினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது.

பி9 ஸ்மார்ட்போன் சிறப்பான கேமரா அம்சங்களைக் கொண்டு அதே சமயம் சக்திவாய்ந்த ஹார்டுவேர் மற்றும் அழகிய வடிவமைப்பு கொண்டுள்ளது. பயனர்களுக்குச் சிறப்பான கேமரா அனுபவம் வழங்க லெய்கா எனும் நிறுவனத்துடன் இணைந்து ஹூவாய் நிறுவனம் இந்தக் கருவியின் கேமராவை வழங்கியுள்ளது.

ஹூவாய் நிறுவனமும் பி9 ஸ்மார்ட்போன் கருவியினை ஏப்ரல் மாதம் நடைபெற்ற விழாவில் லண்டனில் அறிமுகம் செய்தது. அன்று முதல் அந்நிறுவனம் மொத்தம் 1.54 மில்லியன் கருவிகளை ஏற்கனவே விற்பனை செய்துள்ளது. பின் சில மாத இடைவெளிக்குப் பின் இந்தக் கருவி இந்தியாவில் ஆகஸ்டு 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

கேமரா

கேமரா

சிறப்பான கேமரா கொண்ட கருவியினை வாங்க வேண்டுமெனில் ஹூவாய் பி9 நல்ல தேர்வு ஆகும். 12 எம்பி டூயல் கேமரா செட்டப், லெய்கா summarit h 1:2.2/27 வகை லென்ஸ் மற்றும் 1.25 மைக்ரான் பிக்சல் கொண்டிருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் அழகிய புகைப்படங்களை எடுக்க முடியும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

5.2 இன்ச் 1080*1920 பிக்சல் டிஸ்ப்ளே கொண்ட ஹூவாய் பி9 கருவியின் திரை சீராகவும் பிரகாசமாகவும் இருக்கின்றது. இதோடு நிறங்களை மாற்றியமைக்கும் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

சிப்செட்

சிப்செட்

ஹைசிலிக்கான் கிரின் 955 ஆக்டா கோர் சிப்செட் கார்டெக்ஸ் ஏ73 கோர், 2.5 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ53 கோர் சிப்செட் கொண்டிருக்கின்றது. இதோடு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை சிப்செட் மூலம் மல்டி டாஸ்கிங் மற்றும் அதிக மெமரி கொண்ட ஆப்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

ஹூவாய் பி9 கருவியில் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் ஹூவாய் நிறுவனத்தின் எமோஷன் யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு பயனுள்ள அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

விலை

விலை

ஹூவாய் பி9 கருவியில் ஹோம், பேக் மற்றும் மல்டி டாஸ்கிங் பட்டனக்கள் மற்றும் ஷார்ட்கட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ரூ.39,999 என்ற விலையில் கிடைக்கும் ஹூவாய் பி9 ஸ்மார்ட்போன் கருவியானது சீன நிறுவன கருவிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும்.

Best Mobiles in India

English summary
Huawei P9: A power-packed camera phone that oozes premiumness
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X