எல்லாமே உயர்தரம்: ஹூவாய் பி50 ப்ரோ 4ஜி இப்படிதான் இருக்கும்!
ஹூவாய் பி50 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனின் முழுமையான விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் இது சக்தி வாய்ந்த சாதனமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஹூவாய் நிறுவனத்தின் பி ஸ்மார்ட்போன் வரிசை முதன்மை தர வன்பொருள் அம்சங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக இதன் கேமரா வன்பொருள் சிறந்தவையாக உள்ளது. சீனாவில் ஹூவாய் பி50 தொடரின் விரிவாக்கத்துக்கு நிறுவனம் தயாராக இருக்கிறது. இந்த தொடரில் பி 50, பி50 ப்ரோ மற்றும் பி 50 ப்ரோ ப்ளஸ் உள்ளிட்ட பல மாடல்கள் இதில் இருக்கும். நிறுவனம் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களை முதன்மை தொடரான 4ஜி வகைகளை அறிமுகப்படுத்த உள்ளது. ஹூவாய் பி50 ப்ரோ 4ஜி மாறுபாட்டின் முழு விவரக்குறிப்பும் வெளியாகியுள்ளது.

ஹூவாய் பி40 ப்ரோ 40ப்ரோ 4ஜி முக்கிய அம்சம் குறித்து டிப்ஸ்டர் இஷான் அகர்வால் மற்றும் மைஸ்மார்ட் பிரைஸ் இணைந்து தகவலை வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, சாதனம் JAD-AL50 மாதிரி எண்ணைக் கொண்டிருக்கும். இந்த சாதனம் 6.6 அங்குல OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும். 450PPI பிக்சல் அடர்த்தி, 1228 x 2700 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 1440Hz PMW அம்சத்தை கொண்டுள்ளது.
டிஸ்ப்ளே அதிக புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. இதில் இரட்டை செல்பி ஸ்னாப்பர்களுக்காக மேல் இடது மூளையில் மாத்திரை வடிவ கேமரா கட்அவுட்டை கொண்டுள்ளது. ஹூவாய் பி50 ப்ரோ 4ஜி முந்தைய ஜென் மாடல்களை போன்றே கேமராவை மையாகக் கொண்டிருக்கிறது.
மேலும் ஹூவாய் பி50 ப்ரோ 4ஜி சாதனத்தின் பின்புறத்தில் 50 எம்பி முதன்மை சென்சார் உள்ளிட்ட நான்கு கேமராக்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் பிரதான லென்ஸ் ஆக 40 எம்பி மோனோக்ரோம் சென்சார், 13 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் ஆகியவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் முன்புறத்தில் 64 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை செல்பி கேமரா இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
பி50 ப்ரோ 5ஜி சக்தி அளிக்க ஹூவாய் முதன்மை கிரீன் 9000 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதிகளை கொண்டுள்ளது. மேலும் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதில் கூடுதல் அம்சங்களாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவையை கொண்டிருக்கிறது. இதில் கைரேகை ஸ்கேனர் அம்சமும் இடம்பெறும். ஹூவாய் பி50 ப்ரோ 4ஜி வாட்டர் மற்றும் தூசி ரெசிஸ்டென்ட்டா ஐபி68 சான்றிதழ் அம்சமும் இருக்கிறது. மேலும் இதில் 4360 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 66 வாட்ஸ் மற்றும் 55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications