Huawei p40 lite 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: 64 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்., விலை தெரியுமா?

|

Huawei p40 lite ஸ்மார்ட்போன் 5 ஜி தொடரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 64 எம்.பி பிரதான கேமராவும், 16 எம்.பி செல்பி கேமரா வசதியும் உள்ளது. இதன் விலை மற்றும் பிற விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஹூவாய் பி 40 லைட் ஸ்மார்ட்போன்

ஹூவாய் பி 40 லைட் ஸ்மார்ட்போன்

ஹூவாய் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் ஸ்மார்ட்போனாக ஹூவாய் பி 40 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ஹூவாய் பி 40 லைட் ஸ்மார்ட்போன் 5 ஜி தொடர் ஸ்மார்ட்போனாக ஐரோப்பிய சந்தையி் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குவாட் கேமரா அமைப்பு

குவாட் கேமரா அமைப்பு

இந்த சாதனத்தில் புகைப்படம் எடுப்பதற்கான குவாட் கேமரா அமைப்பை வழங்கியுள்ளது. கேமரா அமைப்பு 64 எம்.பி. மேக்ரோ சென்சார் வசதியையும் மற்றும் f / 2.4 ஆழ சென்சார் வசதியும் கொண்டுள்ளது.

11,600 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே: அதிசிய பச்சை வால் நட்சத்திரம்., மிஸ் பண்ணாதிங்க!11,600 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே: அதிசிய பச்சை வால் நட்சத்திரம்., மிஸ் பண்ணாதிங்க!

16 எம்.பி செல்பி கேமரா

16 எம்.பி செல்பி கேமரா

அதேபோல் முன் காட்சியில் வழங்கப்பட்ட பஞ்ச்-ஹோலில் 16 எம்.பி செல்பி கேமரா உள்ளது. இது சிறந்த செல்பி மற்றும் வீடியோ அழைப்பை உருவாக்குகிறது. இந்த செயலி குறித்து விவரிக்கையில், ​​ஹூவாய் பி 40 லைட் ஒரு உயர்நிலை ஹைசிலிகான் கிரின் 820 5 ஜி செயலியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

Android 10 OS

Android 10 OS

இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு உள்ளமைவுடன் வருகிறது. இந்த சாதனம் Android 10 OS இல் இயக்கப்படுகிறது. இருப்பினும் Google சேவைகள் மற்றும் பயன்பாடுகள் ஏதும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 4000 mAh பேட்டரி

4000 mAh பேட்டரி

பயோமெட்ரிக் அங்கீகாரம் அதாவது பக்க பேனலில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படுகிறது. தொலைபேசி யூ.எஸ்.பி டைப்-சி, டூயல் வால்ட், டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. சாதனம் 5 ஜி இணைப்பு ஆதரவுடன் 4000 mAh பேட்டரி யூனிட்டுடன் 40W விரைவு சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

ஹூவாய் பி 40 லைட்: விலை மற்றும் விவரம்

ஹூவாய் பி 40 லைட்: விலை மற்றும் விவரம்

ஹூவாய் பி 40 லைட் விலை, இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.32,762 ஆகும். இந்த சாதனத்திற்கான முன்கூட்டிய ஆர்டர்கள் முன்னதாகவே ஐரோப்பிய சந்தையில் தொடங்கியுள்ளன. இந்த சாதனம் ஐரோப்பாவில் மே 29, 2020 முதல் விற்பனைக்கு வரும் எனவும் தெரிகிறது. இந்த சாதனம் வரும் மாதங்களில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போதுவரை நிறுவனத்தின் தரப்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஏர்டெல்.! அதிரடி சலுகை.! எந்தெந்த திட்டங்களில்?மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஏர்டெல்.! அதிரடி சலுகை.! எந்தெந்த திட்டங்களில்?

ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன்

ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன்

அதேபோல் ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன் ஆனது 6.39-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720X1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6.1 இன்ச் புல் எச்டி+ டிஸ்ப்ளே

6.1 இன்ச் புல் எச்டி+ டிஸ்ப்ளே

இந்த போனானது ஆண்ட்ராய்டு 10 (அவுட் ஆப் பாக்ஸ்), ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 990 SoC ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது. அதேபோல் ஹூவாய் மொபைல் சர்வீஸ் வசதியும். மேலும் 6.1 இன்ச் புல் எச்டி+ டிஸ்ப்ளே ஆகியவையும் கிடைக்கிறது.

அல்ட்ரா விஷன் மூன்று கேமரா வசதி

அல்ட்ரா விஷன் மூன்று கேமரா வசதி

ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன் அல்ட்ரா விஷன் மூன்று கேமரா வசதி, இந்த போனானது 8 ஜிபி வரை ரேம், 50 எம்பி சோனி சென்சார் + 16 எம்பி + 8 எம்பி அல்ட்ரா விஷன் மூன்று கேமரா வசதி உள்ளது. அதேபோல் செல்பி கேமரா மட்டும் 32 மெகாபிக்சலாக உள்ளது. மேலும் இந்த போனில் 128 ஜிபி இன்டர்னல் மெமரி, 22.5W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 3,800 எம்ஏஎச் பேட்டரி வசதியும் உள்ளது.

ஹூவாய் பி40 ப்ரோ குறித்து வெளியான தகவல்கள்

ஹூவாய் பி40 ப்ரோ குறித்து வெளியான தகவல்கள்

ஹூவாய் பி40 ப்ரோ குறித்து வெளியான தகவல்கள் இந்த போனானது 6.58 இன்ச் புல் எச்டி+ (1,200x2,640 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆகியவை இடம் பெற்றுள்ளது. மேலும் இதில்- 8 ஜிபி வரை ரேம், ஆக்டோ கோர் 990 எஸ்ஓசி பிராசஸர் வசதி உள்ளது. இதில் 50 எம்பி, 40 எம்பி, 12 எம்பி என அல்டா விஷன் கேமராக்கள் உள்ளது.

50 எக்ஸ் ஜூம் வசதியும் 32 மெகா பிக்சல் செல்பி கேமரா

50 எக்ஸ் ஜூம் வசதியும் 32 மெகா பிக்சல் செல்பி கேமரா

மேலும் 50 எக்ஸ் ஜூம் வசதியும் 32 மெகா பிக்சல் செல்பி கேமரா வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்த போனானது 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியோடு வெளிவர வாய்ப்புள்ளது. இதில் 40W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு, 4200 எம்ஏஎச் பேட்டரி வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

இப்போ இது வேணுமா: டிரம்ப் பதிவிட்ட திரைப்பட மார்பிங் வீடியோ- குவியும் விமர்சனங்கள்!இப்போ இது வேணுமா: டிரம்ப் பதிவிட்ட திரைப்பட மார்பிங் வீடியோ- குவியும் விமர்சனங்கள்!

ஹூவாய் பி40 ப்ரோ விலை தகவல்

ஹூவாய் பி40 ப்ரோ விலை தகவல்

அதேபோல் ஹூவாய் பி40 ப்ரோவின் 128 ஜிபி மாடலானது ரூ.59,000 என்றும், 256 ஜிபி மாடலானது ரூ.64,400 என்றும் மற்றும் 512 ஜிபி மாடலானது ரூ.73,000 என்றும் விலை நிர்ணயம் செய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஹூவாய் பி40 ப்ரோ விலை குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

source: indiatoday.in

Best Mobiles in India

English summary
Huawei p40 lite 5G smartphone launched with 64 mp camera price and specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X