வாக்கக் காப்பாத்திர நேரமா இது., கொரோனாவுக்கு பயப்படாத huawei: 3 புதிய போன்கள் அறிமுகம்!

|

ஹுவாய் பி40 லைட் இ ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன் ஆனது 6.39-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720X1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் பி40 போன் குறித்து வெளியான தகவல்கள்:

ஹூவாய் பி40 போன் குறித்து வெளியான தகவல்கள்:

இந்த போனானது ஆண்ட்ராய்டு 10 (அவுட் ஆப் பாக்ஸ்), ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 990 SoC ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது. அதேபோல் ஹவாய் மொபைல் சர்வீஸ் வசதியும். மேலும் 6.1 இன்ச் புல் எச்டி+ டிஸ்ப்ளே ஆகியவையும் கிடைக்கிறது.

அல்ட்ரா விஷன் மூன்று கேமரா வசதி

அல்ட்ரா விஷன் மூன்று கேமரா வசதி

இந்த போனானது 8 ஜிபி வரை ரேம், 50 எம்பி சோனி சென்சார் + 16 எம்பி + 8 எம்பி அல்ட்ரா விஷன் மூன்று கேமரா வசதி உள்ளது. அதேபோல் செல்பி கேமரா மட்டும் 32 மெகாபிக்சலாக உள்ளது. மேலும் இந்த போனில் 128 ஜிபி இன்டர்னல் மெமரி, 22.5W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 3,800 எம்ஏஎச் பேட்டரி வசதியும் உள்ளது.

ஹூவாய் பி40 ப்ரோ குறித்து வெளியான தகவல்கள்

ஹூவாய் பி40 ப்ரோ குறித்து வெளியான தகவல்கள்

இந்த போனானது 6.58 இன்ச் புல் எச்டி+ (1,200x2,640 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆகியவை இடம் பெற்றுள்ளது. மேலும் இதில்- 8 ஜிபி வரை ரேம், ஆக்டோ கோர் 990 எஸ்ஓசி பிராசஸர் வசதி உள்ளது. இதில் 50 எம்பி, 40 எம்பி, 12 எம்பி என அல்டா விஷன் கேமராக்கள் உள்ளது.

50 எக்ஸ் ஜூம் வசதியும் 32 மெகா பிக்சல் செல்பி கேமரா

50 எக்ஸ் ஜூம் வசதியும் 32 மெகா பிக்சல் செல்பி கேமரா

மேலும் 50 எக்ஸ் ஜூம் வசதியும் 32 மெகா பிக்சல் செல்பி கேமரா வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்த போனானது 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியோடு வெளிவர வாய்ப்புள்ளது. இதில் 40W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு, 4200 எம்ஏஎச் பேட்டரி வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது

ஹூவாய் நிறுவனம் மட்டும் அறிவித்தப்படி வெளியீடு

ஹூவாய் நிறுவனம் மட்டும் அறிவித்தப்படி வெளியீடு

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பீதி காரணமாக பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மற்றும் விற்பனை ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஹூவாய் நிறுவனம் மட்டும் அறிவித்தப்படி அதன் போன்களை வெளியிட்டு வருகிறது. சியோமி மட்டுமின்றி பல நிறுவனங்களும் தங்களது புது மாடல் போன் அறிமுகத்தை ஒத்தி வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே இருக்கிறீர்களா., Google அட்டகாச அறிவிப்பு: 100 கணக்கான இலவச மூவிஸ்!வீட்டிலேயே இருக்கிறீர்களா., Google அட்டகாச அறிவிப்பு: 100 கணக்கான இலவச மூவிஸ்!

 ஹூவாய் பி40 ஸ்மார்ட்போன் விலை தகவல்

ஹூவாய் பி40 ஸ்மார்ட்போன் விலை தகவல்

ஹூவாய் பி40 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.42,700 இருக்கலாம், இதன் 128 ஜிபி மாடல் ஆனது ரூ.45,900 என்றும் மற்றும் இதன் 256 ஜிபி மாடலானது சுமார் ரூ.51,500 என்றும் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூவாய் பி40 ப்ரோ விலை தகவல்

ஹூவாய் பி40 ப்ரோ விலை தகவல்

அதேபோல் ஹூவாய் பி40 ப்ரோவின் 128 ஜிபி மாடலானது ரூ.59,000 என்றும், 256 ஜிபி மாடலானது ரூ.64,400 என்றும் மற்றும் 512 ஜிபி மாடலானது ரூ.73,000 என்றும் விலை நிர்ணயம் செய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஹூவாய் பி40 ப்ரோ விலை குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

Best Mobiles in India

English summary
huawei p40, huawei p40 pro, huawel p40 pro plus launch today; here expected price and specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X