விலை இவ்வளவா?- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு!
ஹூவாய் நிறுவனம் சீனாவில் ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. ஹூவாய் 40 ப்ரோ மாடலுடன் ஹூவாய் பி40 5ஜி கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3988 யுவான் ஆக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.45,064 ஆகும். தற்போது வாங்குவதற்காக ஜேடி.காம்-ல் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஹூவாய் பி40 ஸ்மார்ட்போன் இரட்டை வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டார்க் ப்ளூ, ஃப்ரோஸ்ட் சில்வர் வண்ண விருப்பங்களில் வருகிறது. 6.1 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.
60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் கிரின் 990 4ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மெமரி நீட்டிப்பு ஆதரவுக்காக இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.
ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி அல்ட்ரா விஷன் கேமரா, 16 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா வசதி இருக்கிறது. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3800 எம்ஏஎச் பேட்டரி சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என தெரிகிறது. இருப்பினும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பதிப்பு குறித்து தெரியவில்லை.
File Images


Click it and Unblock the Notifications