Home
Mobile

ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!

ஹூவாய் நிறுவனம் சீனாவில் தனது புதிய ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக அசத்தலான சிப்செட், அதிநவீன கேமராக்கள் என பல்வேறு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூவாய் பி40 4ஜி

ஹூவாய் பி40 4ஜி

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நீலம், சிலவர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 60Hz refresh rate, 2340 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்

50எம்பி அல்ட்ரா விஷன் கேமரா

50எம்பி அல்ட்ரா விஷன் கேமரா

ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி அல்ட்ரா விஷன் கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 8எம்பி டெலிபோட்டோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த சாதனத்தின் முன்புறம் 32எம்பி கேமரா + IR கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது, மேலும கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

கிரிண் 990 4ஜி சிப்செட் வசதி

கிரிண் 990 4ஜி சிப்செட் வசதி

ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போனில் கிரிண் 990 4ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

3800 எம்ஏஎச் பேட்டரி

3800 எம்ஏஎச் பேட்டரி

ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போனில் 3800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 22.5W Huawei சூப்பர் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் எடை 184 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை 802.11, ஜிபிஎஸ், என்எப்சி

புளூடூத் 5.1, வைஃபை 802.11, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்அடக்கம். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்)ரூ.45,064-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei P40 4G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X