இந்தியா: வியக்கவைக்கும் விலையில் விற்பனைக்கு வந்தது ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.71,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்தது ஹூவாய் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவாட-கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக கிரிண் 980 பிராசஸர் கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும், அதே சமயம் விலைக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு புதிய அம்சங்கள்
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. பின்பு விரைவில் ஆஃப்லைன் தளங்களில் ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் பி30 ப்ரோ:
ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இக்கருவி ஹைசிலிகான் கிரிண் 980, டூயல் கார்டெக்ஸ்- ஏ76 2.6ஜிகாஹெர்ட்ஸ் சிப்செட் ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 40எம்பி ஹுவாய் சூப்பர் ஸ்பெக்ட்ரம் சென்சார் + 20எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் + 8எம்பி ஆப்டிகல் பெரிஸ்கோப்-ஜூம் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 32எம்பி சூப்பர் செல்பீ மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 4200எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் வயர்லெஸ் சார்ஜிங், 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11,யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது.

விலை:
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.71,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications