இந்தியா: பட்ஜெட் விலையில் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அமேசான் வலைதளத்தில் இந்த அட்டகாசமான சாதனம் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,990-ஆக
உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,990-ஆக உள்ளது.

டிஸ்பிளே
ஹுவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.15-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா
ஹுவாய் பி30 லைட் சாதனத்தின் பின்புறம் 24எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டோ-கோர் கிரிண் 710
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரிண் 710 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மெமரி
ஹுவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, யுஎஸ்பி போர்ட், என்எப்சி, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications