Home
Mobile

40எம்பி கேமராவுடன் களமிறங்கிய ஹுவாய் பி30 மற்றும் பி30 ப்ரோ.! விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.!

ஹுவாய் பி30 மற்றும் பி30 ப்ரோ சாதனங்கள் கருப்பு, வெள்ளை, கிரிஸ்டல், அரோரா போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுவாய் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி நேற்று புதிய ஹுவாய் பி30 மற்றும் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 40எம்பி கேமராக்களுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

40எம்பி கேமராவுடன் களமிறங்கிய ஹுவாய் பி30 மற்றும் பி30 ப்ரோ.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களில் பின்புறம் மூன்று கேமரா அமைப்புகள் மற்றும் டிஸ்பிளே கைரேகை ரீடர், பெரிய டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுவாய் பி30 மற்றும் பி30 ப்ரோ

ஹுவாய் பி30 மற்றும் பி30 ப்ரோ

ஹுவாய் பி30 மற்றும் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனஅந்நிறுவனம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இரண்டு ஸ்மர்ரட்போன்களிலும் 13வாட் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இடம்பெற்றுள்ளது.

கருப்பு, வெள்ளை

கருப்பு, வெள்ளை

ஹுவாய் பி30 மற்றும் பி30 ப்ரோ சாதனங்கள் கருப்பு, வெள்ளை, கிரிஸ்டல், அரோரா போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹுவாய் பி30 ப்ரோ:

ஹுவாய் பி30 ப்ரோ:

டிஸ்பிளே: 6.47-இன்ச் ஒஎல்இடி எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080பிக்சல்)
மெமரி: 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி
சிப்செட்;: ஹைசிலிகான் கிரிண் 980, டூயல் கார்டெக்ஸ்- ஏ76 2.6ஜிகாஹெர்ட்ஸ் ஆதரவு.
ரியர் கேமரா: 40எம்பி ஹுவாய் சூப்பர் ஸ்பெக்ட்ரம் சென்சார் +20எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் + 8எம்பி
ஆப்டிகல் பெரிஸ்கோப்-ஜூம்
செல்பீ கேமரா: 32எம்பி சூப்பர் செல்பீ
பேட்டரி: 4200எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
15வாட் வயர்லெஸ் சார்ஜிங், 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11,
யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக்

ஹுவாய் பி30 :

ஹுவாய் பி30 :

டிஸ்பிளே: 6.1-இன்ச் ஒஎல்இடி எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080 பிக்சல்)
மெமரி: 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி
சிப்செட்;: ஹைசிலிகான் கிரிண் 980, டூயல் கார்டெக்ஸ்- ஏ76 2.6ஜிகாஹெர்ட்ஸ் ஆதரவு.
ரியர் கேமரா: 40எம்பி ஹுவாய் சூப்பர் ஸ்பெக்ட்ரம் சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் + 8எம்பி
ஆப்டிகல் பெரிஸ்கோப்-ஜூம்
செல்பீ கேமரா: 32எம்பி சூப்பர் செல்பீ
பேட்டரி: 3650எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
15வாட் வயர்லெஸ் சார்ஜிங், 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11,
யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக்

விலை:

விலை:

ஹுவாய் பி30 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ( இந்திய மதிப்பில்) ரூ.62,000-ஆக உள்ளது.
ஹுவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ( இந்திய மதிப்பில்) ரூ.77,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei P30, P30 Pro with Kirin 980, 40MP Huawei SuperSpectrum camera announced: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X