இந்தியா: விரைவில் அறிமுகமாகும் ஹூவாய் பி30 லைட்.!

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரிண் 710 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

|

இந்திய சந்தையில் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஹூவாய் பி30 மற்றும் ஹூவாய் பி30 ப்ரோ என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள்
அடுத்த வாரம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா: விரைவில் அறிமுகமாகும் ஹூவாய் பி30 லைட்.!

ஹுவாய் பி30 லைட் சாதனத்தில் வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் இதன் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹுவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.15-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கேமரா:

கேமரா:

ஹுவாய் பி30 லைட் சாதனத்தின் பின்புறம் 24எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரிண் 710 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 மெமரி:

மெமரி:

ஹுவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

இந்த ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, யுஎஸ்பி போர்ட், என்எப்சி, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.குறிப்பாக ரூ.22,255-விலையில் விற்பனைக்கு வரும் ஹுவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Huawei P30 Lite expected to launch in India alongside P30 Pro next week: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X