ஹூவாய் பி20: அழகில் கவர்ந்திழுக்கும் கச்சிதமான ஸ்மார்ட்போன்.!

ஸ்மார்ட்போன்களின் பின்பக்கத்தில் இரட்டை கேமராக்கள் என்ற வழக்கமான முறையைக் கடந்து, ஹூவாய் பி20 ஃபோனின் பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் காணப்படுகின்றன.

|

ஸ்மார்ட்போன்களின் பின்பக்கத்தில் இரட்டை கேமராக்கள் என்ற வழக்கமான முறையைக் கடந்து, ஹூவாய் பி20 ஃபோனின் பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் காணப்படுகின்றன. இதனால் ட்ரைபோடு இல்லாத நீண்டநேர ஷட்டர் மூலம் திறந்த படங்களை எடுக்க முடியாது என்ற நிலையில் இருந்து ஒரு விடிவு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் முன்பக்கத்தில் 24 எம்பி செல்ஃபீ கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் அழகில் கவர்ந்திழுக்கும் இந்த ஃபோனில் உள்ள மற்ற சிறப்பம்சங்களைக் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

மேற்பகுதியில் பிரகாசிக்கக் கூடிய பெயிண்ட் கொண்டு இரட்டை கிளாஸ் பாடி உடன் ஒரு மெட்டல் பிரேமை பெற்று கவர்ச்சிகரமாக காட்சி அளிக்கிறது ஹூவாய் பி20. இந்த ஸ்கிரீன் கிளாஸிற்கு பின்னால் 5.8 இன்ச் டிஸ்ப்ளே காணப்படுகிறது. அதிகபடியான பொருட்களின் சேர்ப்பு மூலம் பி20 165 கிராம் எடையைப் பெற்றுள்ளது.

மேலே உள்ள இரண்டு கிளாஸ்களும் சற்று வளைந்ததாக அமைந்து, முனை மழுங்கிய பிரேம் உடன் ஒத்து போவதாக உள்ளது. மெட்டல் பிரேம் மென்மையாகவும் பளபளப்பாகவும் உள்ளதால், பி20 வழுக்கும் தன்மையோடு காணப்படுகிறது. தற்போது முன்னணி மற்றும் இடைப்பட்ட ஃபோன்களில் நீரில் இருந்து பாதுகாக்கக் கூடிய அம்சம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஹூவாய் பி20 இல் சுமாரான தூசு மற்றும் ஒளி வேறுபாட்டிற்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.

 வடிவமைப்பு

வடிவமைப்பு

ஃபோனின் முன்பகுதியில் ஏறிச் செல்லும் வகையில் கைரேகை ஸ்கேன்னர், எப்போதும் இயக்கத்திலேயே உள்ளது. ஸ்கீரின் எதிர் பக்கத்தில் உள்ள ஒரு வட்டமான கிரிலில் இயர்பீஸ் மற்றும் 24எம்பி செல்ஃபீ கேமரா ஆகியவை உள்ளன. இயர்பீஸ் நடுவில் இல்லாதது, சிலருக்கு நெருடலை ஏற்படுத்துவதாக அமையலாம்.

பின்பக்கத்தில் ஒரு சிறிய குடுமி போல, செங்குத்தான முறையில் இரட்டை கேமரா அமைந்துள்ளது. ஹூவாய் பி20 ஒரு கிளாஸ் ஃபோனாக இருந்தாலும், வெளிப்புறத்தின் பெயிண்ட் பணி கச்சிதமாக உள்ளது. எனவே புற அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களை, இது கட்டாயம் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

பி20 ஃபோனின் டிஸ்ப்ளே அமைப்பில் ஹூவாய் நிறுவனம் அதிக உழைப்பை செலவழித்து உள்ளது. வட்டமான முனைகளைக் கொண்ட இந்த ஃபோனில், அமோல்டு பேனல் இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது. இதில் உள்ள எல்டிபிஎஸ் ஐபிஎஸ் எல்சிடி மிகவும் கச்சிதமாக உள்ளது. ஆனால் அல்மோடு எல்சிடி-யில் உள்ளது போல கருப்பு நிற கோடு ஆழமாக காணப்படுவதில்லை. இதனால் குறைந்தபட்ச ஒளி நிலையில் அவ்வளவு பயனுள்ளதாக அமைவதில்லை. இருந்தாலும் இருளில் கவனிக்கத்தக்க ஒளியைப் பெற முடிகிறது. அதற்காக பி20 ஃபோனின் ஸ்கிரீன் அவலட்சணமானது என்று கூற முடியாது.

சூரிய ஒளியில் சாதனை படைப்பதாக இல்லாவிட்டாலும், பி20 இல் உள்ள எல்சிடி-யில் வெளிச்சத்தை தானாக உயர்த்தும் தானியங்கி முறை காணப்படுவதால், சூரிய ஒளியில் சிறப்பான செயல்பாட்டை அளிக்க முடிகிறது. ஹூவாயின் எல்சிடி-யைப் பொறுத்த வரை, நிறம் துல்லியமாக அமைந்து, 2.1 என்ற குறைந்தபட்ச அளவு முதல் 3.6 என்ற அதிகபட்ச அளவு வரையிலான ஒரு சராசரி டெல்டாஇ பெற முடிகிறது. வழக்கமான தொழிற்சாலை அமைப்புகளில், சாதாரண முறையில் வைத்தாலே இந்த அளவுகளைப் பெற முடிகிறது.

பேட்டரி

பேட்டரி

பொதுவாக பேட்டரி திறனில் ஹூவாய் சாதனங்கள் பின்தங்குவதில்லை. பி20 ப்ரோவை விட இது சற்று அளவு குறைவாக இருப்பதால், பி20-யில் 3,400 எம்ஏஹெச் பேட்டரி காணப்படுகிறது. இந்த பேட்டரி திறன் குறைவு மூலம் வீடியோ ப்ளேபேக் மற்றும் இணைய பிரவுஸிங்கில் சற்று பின்னடைவைக் காண முடிகிறது. ஆனாலும் 75 மணிநேரம் பயன்படுத்த முடியும் என்பது ஒரு சிறப்பான செயல்பாடு எனலாம்.

பி20 பேட்டரி குறைந்த திறனைக் கொண்டிருந்தாலும், விரைவான சார்ஜிங் திறனைப் பெற்றுள்ளது. இந்த விரைவான சார்ஜிங் செய்ய பயன்படும் 4.5வி/ 5ஏ சூப்பர்சார்ஜ் அடாப்டர் மூலம் ஃபோன் சார்ஜ் அளவு 0% இலிருந்து 65% எட்ட 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர்

ஹூவாய் பி20-ன் கீழ்பகுதியில் ஸ்பீக்கர் காணப்படுகிறது. ஆனால் ஸ்டீரியோ இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஹூவாய் பி20 ஃபோனில் உள்ள ஒரு சக்திவாய்ந்த வெளிப்புற ஆம்ளிஃபையர் மூலம் தெளிவான ஆடியோ வெளியீடு கிடைக்கிறது. ஆனால் ஹெட்போனை செருகினால் வழக்கம் போல, ஒலி அளவு மேலும் குறைகிறது என்றாலும், ஒட்டுமொத்த ஆடியோ வெளியீடு சிறப்பாக உள்ளது.

ஆன்ட்ராய்டு 8.1 உடன் இஎம்யூஐ
ஹூவாய் பி20 ஃபோனில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் இஎம்யூஐ 8.1 ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் உள்ள நொட்சை தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் ஒரு கருப்பு ஸ்டேட்டஸ் பார் மூலம் மூடி மறைக்கலாம். இதில் உள்ள நெவிகேஷன் பாரை, கைரேகை கண்டறிதலுக்கு பயன்படுகிறது. இதை பழைய நிலைக்கு செல்லவும், அழுத்தி பிடித்தால் முகப்பு பக்கத்திற்கும், சமீபகால பயன்பாடுகளுக்கு ஏதாவது ஒரு திசை நோக்கி நகர்த்தியும் பயன்படுத்தலாம்.

செயல்பாடு

செயல்பாடு

ஹூவாய் பி20-ல் கிரின் 970-யை பெற்றுள்ளது. இதன் செயல்பாட்டை ஆழ்ந்து பரிசோதிக்கும் போது, கிரின் 970-க்குள் நான்கு 2.4 ஜிஹெச்இசட் கார்டெக்ஸ்-ஏ73 மற்றும் மற்ற நான்கு 1.8 ஜிஹெச்இசட் கார்டெக்ஸ்-ஏ53 ஆகியவை உள்ளன. சிபியூ சிறப்பாக இருந்தாலும், மாலி-ஜி72 எம்பி12 ஆகியவை அவ்வளவு சிறப்பாக இல்லை எனலாம்.

ஹூவாய் பி20 இல் இரட்டை கேமரா அமைப்பு காணப்படுகிறது. இதனால் எஃப்/1.6 லென்ஸ்களுக்கு பின்னால் ஒரு 12எம்பி ஓஐஎஸ் கலர் மற்றும் ஒரு 20 எம்பி மோனோகிரோம் இமேஜர் ஆகியவை உள்ளன. சென்ஸர் வழக்கத்தை விட சற்று பெரிதாக 1/2.3" என்ற அளவிலும், அதன் பிக்ஸல்ஸ் சுமார் 1.55µm-யை ஒட்டி காணப்படுகிறது. முன்பக்க கேமரா 24எம்பி அளவிலும், லென்ஸ் துளை எஃப்/2.0 அளவிலும் உள்ளது. வீடியோ பதிவில் 30எஃப்பிஎஸ் இல் 4கே பகுப்பாய்வு கிடைக்கிறது.

இதில் மிகவும் மெதுவான அசைவு (ஸ்லோ மோஷன்) பதிவு செய்யும் வசதி கூட உள்ளது. வழக்கமான வீடியோ பதிவு மற்றும் மெதுவான அசைவு பதிவு ஆகியவை முறையே, 720p/240 மற்றும் 1080p/120 எஃப்பிஎஸ் என்ற தரத்தில் கிடைக்கிறது. பதிவு செய்யப்பட்ட ஆடியோவில் 192கேபிபிஎஸ் பிட்ரெட் கொண்ட ஸ்டீரியோவாக உள்ளது. வழக்கமான 12எம்பி படங்கள் (மாஸ்டர் ஏஐ இல்லாமல்) சிறப்பாக வருகின்றன.

படங்களில் நிறங்கள் கச்சிதமாக, சத்த நிலைகள் குறைவாக மற்றும் கான்ஸ்ட்ராட் சிறப்பாக உள்ளது. குறைந்த ஒளியில் படமெடுக்கும் போது, நைட் மோடில் இருக்கும் ஒளிக்கு ஏற்ப பல்வேறு படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் கார் லைட்கள் அல்லது அதற்கு ஒத்த சிதறல் வெளிச்சத்தில் நைட் மோடு பயன்படுத்தி படமெடுக்க முடியாது.

செல்ஃபீ

செல்ஃபீ

ஹூவாய் பி20 இல் நிறுவப்பட்ட லென்ஸ் உடன் கூடிய 24எம்பி ஸ்னாப்பர் திறனுள்ள அதிகபட்ச பகுப்பாய்வு செல்ஃபீ கேமராக்கள் உள்ளன. இதில் போர்ட்ரெய்ட் முறையும் காணப்படுகிறது. முதன்மை கேமராவில் இருந்து செல்ஃபீ கேமராவிற்கு மாற்றும் போது, வழக்கமாக இந்த நிலைக்கு தான் வருகிறது. சிதறலை தேவைக்கு ஏற்ப இயக்கவும் முடக்கவும் முடியும். ஹூவாய் பி20 இல் சுமார் 3,200பிஎக்ஸ் செங்குத்தான பகுப்பாய்வில், பனோராமா படங்கள் சிறப்பாக எடுக்க முடிகிறது.

விலை நிலவரம்

விலை நிலவரம்

தற்போது ஐரோப்பாவில் ஹூவாய் பி20 €580 என்ற விலை நிர்ணயத்தில் விற்பனையாகி வருகிறது. முன்னணி ஸ்மார்ட்போன்களில் வைத்து விலைக் குறைந்த ஒன்றாக இது காட்சி அளிப்பதால், இதில் உள்ள குறைகள் அவ்வளவு பெரிதாக எடுத்து கொள்ளப்படுவதில்லை.

முடிவு
முன்னணி நிறுவனத்தின் தயாரிப்பான ஹூவாய் பி20, எந்த வகையிலும் நமக்கு ஏமாற்றம் அளிக்காது. பார்வைக்கு அழகாக இருப்பதே, இதன் வலிமை எனலாம். அதிக விலைக் கொண்ட ஹூவாய் பி20 ப்ரோ உடன் ஒப்பிடும் போது, சாதாரண பி20 ஃபோன் ஒரு சிறந்த மாற்றாக தெரிகிறது. முடிவாக, சந்தைக்கு வந்து சற்று பழகிய பிறகு, இதன் விலையில் மேலும் குறைவு ஏற்படலாம் என்பதால், வருங்காலத்தில் இந்நிறுவனத்தின் உயர்தர மற்றும் சிறந்த விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக விளங்கவும் வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei P20 review Price Specifications ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X