ஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.!

|

ஹூவாய் பி20 ஃபோனின் தயாரிப்பில், அந்நிறுவனம் அதிக உழைப்பை செலுத்தி உள்ளது. ஸ்மார்ட்போனில் உள்ள கேமராக்களின் உயர்தர அம்சங்களை முழு அளவில் பயன்படுத்தும் ஒருவருக்கு, இது சிறந்த பலனை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் வடிவமைப்பை பார்த்தால், இதற்கு 'பளபளப்பானது' என்று தான் பெயர் வைக்க வேண்டும். இரண்டு பெரிய கொரில்லா கிளாஸ் மூலம் மூடப்பட்டு, அதன் பக்கங்களில் ஸ்டீலை போல பளபளப்பாக மெருகேற்றப்பட்ட அலுமினியம் மூலம் முழுமை பெற்றுள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

எல்லா பக்கங்களும் எதிரொலிக்கும் தன்மை கொண்டிருந்தாலும், கைரேகை வைப்பதற்கான இடம் எளிதாக அழுக்கடைய வாய்ப்புள்ளது என்பதோடு, சற்று உயர்ந்த நிலையில் கேமரா வைக்கப்பட்டுள்ளதால் விரைவில் தூசு படியலாம் என்பது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இதன் முன்னோடியை விட பெரிய அளவிலான பேட்டரியைக் கொண்டிருந்தாலும், தொட்டு பார்த்தால் அது புலப்படுவதில்லை. முன்பக்கத்தில் உயர்தர கேமராக்கள் மற்றும் ஸ்பீக்கர் அமைந்துள்ளது. ஹூவாய் ஃபோன்களிலேயே முதல் முறையாக சிறிய அளவிலான நோட்ச் காணப்படுகிறது. மேலும் ஹெட்போன்களுக்கான ஜெக் எதுவும் அளிக்கப்படாமல், 3.5மிமீ அடாப்டர் மட்டும் பாக்ஸில் உள்ளது. அல்லது வயர்லெஸ் ஹெட்போன்களைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

 கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

நீர் எதிர்ப்பு திறனில் ஐபி67 மதிப்பை பெற்றுள்ள இந்த ஃபோனை, ஒரு மீட்டர் ஆழமுள்ள தெளிந்த நீரின் அடியில் 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம். ஹூவாய் பி20 ப்ரோ டிஸ்ப்ளேயின் கீழே உள்ள கைரேகை ஸ்கேனர், மிக விரைவாக அதாவது நொடி நேரத்தில் முகப்பு திரைக்கு அழைத்து செல்கிறது. ஃபோனின் முன்பக்கத்தில் உள்ள கேமராவைப் பயன்படுத்தி முகத்தை கண்டறியும் அம்சம் கூட, மிக விரைவாக செயல்படுகிறது. மிக குறைந்த வெளிச்சத்தில் கூட, இது செயல்படுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. உங்கள் பாக்கெட்டில் இருந்து ஃபோனை வெளியே எடுத்த உடனே, இது முகத்தை கண்டறிய ஆரம்பித்து விடுகிறது.

திரை

திரை

இந்த ஃபோனில் ஒரு முழு ஹெச்டி திரையை, 18.7:9 என்ற விகித அளவிற்கு விரிக்கப்பட்டுள்ளது. பிக்ஸல் அடர்த்தியாக 408பிபிஐ உள்ளது. இதன்மூலம் பி20 ப்ரோவின் டிஸ்ப்ளே தரம் சிறப்பாக அமைந்துள்ளது. சுயவிவரத்தின் நிறத்தை தேவைக்கேற்ப மாற்றி கொள்ளலாம். மேலும் வழக்கம் போல, விருப்பத்திற்கு ஏற்ப நிற தட்பவெப்பநிலையை மாற்றி கொள்ள முடியும்.

கூடுதல் வெளிச்சம் கொண்ட சூழ்நிலைகளில் செல்லும் போது, இதன் டிஸ்ப்ளேயின் நிற தட்பவெப்பநிலை, தானாக மாறி விடுகிறது. திரையின் மேற்பகுதி முழுமையாக கருப்பாக மாறி, நோட்ச்சை முழுமையாக மறைத்து விடுகிறது.

பேட்டரி திறன்

பேட்டரி திறன்

ஹூவாய் பி20 ப்ரோவில் ஒரு 4,000எம்ஏஹெச் பேட்டரி காணப்படுகிறது. இது மணிக்கணக்கில் ஆடியோ மற்றும் வீடியோக்களை பார்த்து கேட்டு ரசித்தாலும், ஒரு நாள் முழுவதும் தாக்கு பிடிக்கிறது. எங்கள் சோதனையின் போது, முழுமையான வெளிச்சத்தில் 90 நிமிடங்கள் வீடியோ பார்த்த போதும், 9% பேட்டரி மட்டுமே செலவழிந்தது. ஃபோன் முழுமையாக சார்ஜ் ஆக, 1 மணிநேரம் 24 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது. 45 நிமிடங்களில் 0% இல் இருந்து 80% அடைந்துவிடுகிறது. இதில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இல்லை என்பது ஒரு பின்னடைவு.

கேமரா

கேமரா

பி20 ப்ரோவின் பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் காணப்படுகின்றன. இதில் முக்கிய கேமராவிற்கு அதி உயர்தர பகுப்பாய்வு கொண்ட 40எம்பி சென்ஸர் உள்ளது. இதற்கு பின்பலமாக 20 எம்பி கருப்பு வெள்ளை சென்ஸர் செயல்பட்டு, படத்தின் ஒலியைக் கட்டுபடுத்துவது போன்றவற்றில் உதவுகிறது. மூன்றாவது கேமரா 3எக்ஸ் 'சூம்' லென்ஸ் மற்றும் 8எம்பி சென்ஸர் ஆகியவற்றை கொண்டது.

வழக்கமான முறையில் 10எம்பி அளவிலான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. தேவைப்பட்டால், 40எம்பி படங்களையும் எடுக்கலாம். ப்ரோ முறையை பயன்படுத்தி 76.2எம்பி டிஎன்ஜி சாதாரண கோப்புகளைக் கூட எடுக்க முடியும். 10எம்பி அளவில் படமெடுக்கும் போது 100% பெரிதுப்படுத்தினாலும், ஜெபிஇஜி-யை சிறப்பாக கையாளுகிறது. ஹைபிரிடு சூம் என்ற முறையில் 5எக்ஸ் சூம் படங்களை எடுக்கலாம்.

ஹூவாயின் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிளைஷேசன் (ஓஐஎஸ்) மூலம் ஒரு விநாடியில் 1/16-யை கடந்து கேமரா மெதுவாக செயல்படுவது இல்லை. மேலும் கேமராவில் உள்ள ஓஐஎஸ், கைகளின் நடுக்கத்தை தவிர்க்கிறது.

இந்த ஃபோனில் 4கே பகுப்பாய்வு கொண்ட வீடியோக்களை எடுக்க முடியும். இதில் படத்திற்கு நிலைப்புத் தன்மை இல்லாததால், புட்ஏஜ் சிறப்பாக அமைவதில்லை. இதற்கு 1080பி இல் திருப்திபட்டு கொள்ள வேண்டும்.

இதில் 960எஃப்பிஎஸ் (32எக்ஸ் வேகம்) வரை, சோலே-மோ படம் எடுக்க முடியும். அதே நேரத்தில், 960எஃப்பிஎஸ் மற்றும் 240எஃப்பிஎஸ் ஆகியவற்றை 720பி இல் மட்டுமே எடுக்க முடியும். பி20 ப்ரோவின் முன்பக்கத்தில் உள்ள 24எம்பி சென்ஸர், அதி உயர் பகுப்பாய்வு கொண்டதாக உள்ளது.

இடைமுகம் மற்றும் நம்பகத்தன்மை

இடைமுகம் மற்றும் நம்பகத்தன்மை

ஆண்ட்ராய்டு 8.1 உடன் ஹூவாய் இஎம்யூஐ 8.1 இடைமுகத்தை பயன்படுத்தி இது இயங்குகிறது. இந்த ஃபோனை ஆன் செய்த உடனே, அப்ளிகேஷன்களின் மெனு காட்டப்படுவதில்லை. அது முகப்பு திரைகளில் மறைந்திருக்கும்.

இதில் உள்ள தீம் அப்ளிகேஷனில், ஹூவாய் ரசிகள் மற்றம் ஹூவாய் பி20 ப்ரோ மூலம் தயாரிக்கப்பட்ட 12 நிறுவப்படாத தீம்கள் உள்ளன. இதில் உள்ள இஎம்யூஐ மிக விரைவாக செயல்பட்டு, அப்ளிகேஷன்கள் குறைந்த நேரத்தில் ஏற்றம் காண்கிறது. இதில் ஒரு காலநிலை அப்ளிகேஷன், டார்ச், மொழிப்பெயர்ப்பு அம்சம், ஃபோன் நிர்வாகி, கோப்பு நிர்வாகி மற்றும் மிரர் ஆகியவை உள்ளன.

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

இந்த ஃபோனில் உள்ள நோட்ச், கேம் விளையாடும் போது தொல்லையாக அமையலாம் என்று பயப்பட தேவையில்லை. ஏனெனில் ஒரு கேம் அல்லது அப்ளிகேஷனை நோட்ச் குறுக்கிடுவதாக ஃபோன் கண்டறிந்தால், அந்த பகுதி தானாக கருப்பாக மாற்றப்பட்டு நீக்கப்படுகிறது.

இதில் ஹூவாய் நிறுவனத்திற்கே சொந்தமான வீடியோ மற்றும் மியூஸிக் அப்ளிகேஷன் காணப்படுகிறது. இந்த ஃபோனின் கீழ்பகுதியில் உள்ள சிறப்பான ஸ்பீக்கர்கள் மூலம் அதிகளவிலான சத்தம் வெளியிடப்படுகிறது. பருமனான ஒலியை வெளியிடும் ஸ்பீக்கரில் சிறப்பான பாஸ் கிடைக்கிறது.

செயல்பாடு

செயல்பாடு

ஹூவாய் மேட் 10 ப்ரோவில் இருக்கும் அதே கிரின் 970 சிபியூ, இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள எட்டு கோர்களில், நான்கு கார்டெக்ஸ்-ஏ73-களும், மற்ற நான்கு கார்டெக்ஸ்-ஏ53-களும் காணப்படுகின்றன. இதன் உள்ளக சேமிப்பு வேகம் மிக விரைவாக உள்ளது. படிக்கும் வேகம் 501எம்பி/விநாடி ஆகவும் எழுதும் வேகம் 190எம்பி/விநாடி ஆகவும் உள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
முடிவு

முடிவு

பி20 ப்ரோ ஒரு உயர்தர ஃபோனாக இருந்தாலும் விலை நிர்ணயம் ஏற்று கொள்ளும் வகையில் உள்ளது. மேலும் சிறந்த திறனுள்ள கேமரா, அதிக ஆற்றல், சிறந்த பேட்டரி திறன் மற்றும் கவர்ச்சிகரமான கட்டமைப்பு உள்ளிட்டவை சேர்ந்த ஒரு உலக தரம் வாய்ந்த ஸ்மார்ட்போனாக திகழ்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Huawei P20 Pro review Huawei P20 Pro price and availability; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X