Subscribe to Gizbot

40MP 3X ஆப்டிக்கல் ஜூம் கேமராவுடன் அசத்தும் ஹூவாய் P20 ப்ரோ.!

Posted By: Vivek Sivanandam

ஹூவாய் P20 ப்ரோ வளர்ந்து வரும் மெகா போன்களில் ஒன்று. மெகாபோன் என்றவுடன் போராட்டகாரர்கள் பயன்படுத்தும் ஸ்பீக்கர்கள் இல்லை. ஆனால், பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பெரிய அளவில் செலவு செய்ய விரும்புபவர்களுக்கான விலையுயர்ந்த போன்.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக இருந்தாலும், அவற்றுடன் ஒப்பிடும் போது ஹூவாய் வலிமையான ப்ராண்ட் இல்லை. ஆனால் இதன் விலை குறைவு தான்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 மென்பொருள்

மென்பொருள்

இந்த மொபலை வாங்கும் விலையில் 64 GB ஐபோன் 8 ப்ளஸ் வேண்டுமானால் வாங்கலாமே தவிர, ஐபோன் எக்ஸ் அல்ல. ஹூவாய் மொபைலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் தனித்துவமாக இருக்கிறது. கேமராவில் செய்யப்பட்ட குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் காரணமாக இந்த போன், விலையை கருத்தில் கொள்ளாமல் சிறப்பான போட்டோ சூட்டராக செயல்படுகிறது.

பின்புறம் 3 கேமரா

பின்புறம் 3 கேமரா

ஏப்ரல் 6 முதல் UK வில் விற்பனைக்கு வந்த ஹூவாய் P20 ப்ரோவின் விலை ரூ.72,000. எனினும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் விற்பனைபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இந்த மொபைலை வாங்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், அதன் கேமராவால் அதிர்ஷ்டசாலி ஆகப்போறீர்கள். பின்புறம் 3 கேமராக்கள் உள்ள இந்த மொபைலில், மெயின் சென்லார் கேமரா 40MP, 20MP ப்ளேக் அன்டு வெயிட் கேமரா, 8MP 3X ஜூம் கேமரா ஆகும்.

 ஃபேஸ் அன்லாக்

ஃபேஸ் அன்லாக்

மேலும் இந்த போனில் 24MP HD கேமரா , செல்பி மற்றும் ஃபேஸ் அன்லாக் செய்வதற்கு வசதியாக முன்புறம் உள்ளது. மொபைலின் மற்ற பகுதிகள்
வழக்கமான ஒன்றாகத்தான் உள்ளது. ஹூவாய் மேட் 10 ல் பயன்படுத்திய கிரின் 970 சிபியூ, 6GB ரேம் மற்றும் 128GB சேமிப்புதிறன் உள்ளது.
சமீபத்தில் வெளியான உயர்ரக ஹூவாய் போன்களை ஒப்பிடும் போது, p20 ப்ரோ அதிக எதிரொளிக்கும் கண்ணாடி மற்றும் 4000 mAh
அளவிலான பெரிய பேட்டரியையும் கொண்டுள்ளது. ஹூவாய் தனது கடுமையான முயற்சியினால், சாம்சங் கேலக்ஸி எஸ்9 அல்லது எஸ்9 ப்ளஸை விட கேமரா போன்ற உயர்தர வசதிகளை கொண்டுள்ளது.

கொரில்லா க்ளாஸ்

கொரில்லா க்ளாஸ்

ஹூவாய் என்றாலே பளபளப்பு.இரண்டு பெரிய கொரில்லா க்ளாஸ் உடன் அலுமினியத்தால் செய்யப்பட்ட பக்கவாட்டு பகுதிகள் அதை உறுதி செய்கிறது.தற்போது கருப்பு மற்றும் நீல நிறத்தில் விற்பனைக்கு வந்துள்ள இது, பல்வேறு கவரக்கூடிய நிறங்களில் வெளிவரவுள்ளது. மற்ற ஹூவாய் மொபைலுடன்
ஒப்பிடும் போது பெரிய பேட்டரி இருந்தாலும், அது தெரியாத வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ப்ளஸை விட மிக
மெல்லிசாக(7.8mm) உள்ளது.

சென்சார்

சென்சார்

ஆப்பிளை போல இல்லாமல், பேஸ் அன்லாக் செய்ய அனைத்து தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாதா கேமரா, ஐ.ஆர் கேமரா, டாட் ப்ரெஜெக்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார் அவற்றுள் சில.ஹூவாய் P20 ப்ரோவில் ஹெட்போன் ஜாக் இல்லை. அதற்கு பதிலாக யூ.எஸ்.பி 3.5mmஅடாப்டர் அல்லது வொயர்லஸ் ஹெட்போன் பயன்படுத்தலாம்.இந்த போனின் தண்ணீர் எதிர்க்கும் சக்தி (Water resistant) ஐபி 67. அதாவது 30நிமிடம் வரை சுத்தமான தண்ணீரில் மூழ்கியிருந்தால் ஒன்றும் ஆகாது.திரைக்கு கீழ்பகுதியில் உள்ள பிங்கர் பிரிண்ட் சென்சார், மற்ற உயர்ரக ஹூவாய் போனை போல அதி வேகமாக உள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் அன்லாக் செய்து ஹோம் ஸ்கிரீன் சென்றுவிடும்.

பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம்

பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம்

சாம்சங், ஆப்பிள் போன்களை போல வெறும் வெளிப்பகுதி மட்டுமே அதிகமாக கவர பயன் படாது. ஆனாலும், ஹூவாய் போன் விலையுயர்ந்த போன் போல காட்சியளிப்பதாலும், மிகவும் மெல்லிசாகவும், எடை குறைவாகவும் இருப்பதால் மக்களை கவரும்.மற்ற உயர்ரக மொபலை போல எச்.டி திரையாகஇல்லாவிட்டாலும், 1080×2244 AMOLED திரையை (18:7:9) கொண்டது.இதன் பிக்சல்(408ppi) சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் (529ppi) உடன் ஒப்பிடும்போது மிகக்குறைவு. ஆனாலும் ஓ.எல்.ஈ.டி திரையால் சிறப்பாக செயல்படுகிறது ஹூவாய் போன். மற்ற போன்களை போல இல்லாமல் நிறங்களின்வகைகளை உங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Huawei P20 Pro review; Read more about this in Tamil GizBot

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot