ரூ.65,000/-னு சொன்னா ஒருத்தனும் வாங்க மாட்டான்; இருந்தாலும் ஏன் இந்த விலை.?

இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா.? வேண்டாமா என்பதை ஆராய வேண்டியது மட்டும் தான்.!

|

நம்மில் பெரும்பாலானோர்களுக்கு டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களே இன்னும் கையில் கிடைக்காத நிலைப்பாட்டில், மொத்தம் மூன்று ரியர் கேமராக்கள் கொண்டுள்ள ஸ்மார்ட்போன் என்கிற ஆர்வத்தை கிளப்பிய, ஹூவாய் நிறுவனத்தின் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது, இன்று அதிகாரப்பூர்வமாக அதன் இந்திய விற்பனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

ரூ.65000-னு சொன்னா ஒருத்தன் வாங்க மாட்டான்; இருந்தாலும் ஏன் இந்த விலை?

இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வமான அம்சங்கள் எப்போதோ வெளியாகிவிட்டது, இப்போது இந்திய விலை நிர்ணயமும் அறிவிக்கப்பட்டு விட்டது. இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா.? வேண்டாமா என்பதை ஆராய வேண்டியது மட்டும் தான்.!

6.1 இன்ச் டிஸ்பிளே.!

6.1 இன்ச் டிஸ்பிளே.!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கும் ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் மேம்பட்ட கேமரா மற்றும் ஒரு அற்புதமான முனைகளை கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான, இதர நிறுவங்களின் தலைமை ஸ்மார்ட்போன்களை போன்றே, ஹூவாய் பி20 ப்ரோ ஆனதும் மிக மெல்லிய பெஸல்களை கொண்ட ஒரு புல் வியூ டிஸ்பிளேவை கொண்டுள்ளது, அதாவது ஒரு 6.1 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம்.!

வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம்.!

டிஸ்பிளேவின் கீழ் உட்பொதிக்கப்ட்ட ஹோம் பட்டன் கொண்டுள்ள பி20 ப்ரோ ஆனது ஒரு ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. உடன் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 18: 9 என்கிற திரை விகிதத்தையும் கொண்டுள்ளது. பிளாக், மிட்நைட் ப்ளூ, பிங்க் கோல்ட் மற்றும் ட்வைலைட் ஆகிய நான்கு நிறங்களில் வாங்க கிடைத்தாலும் இந்திய சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்வைலைட் மாடல் வெளியாகவில்லை, மாறாக பிளாக், மிட்நைட் ப்ளூ வண்ண மாடல்கள் மட்டுமே வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1.!

ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1.!

இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் சொந்த கிரீன் 970 ஆக்டா-கோர் செயலி கொண்டு இயங்குகிறது மற்றும் ஆர்டிபிஷியல் இன்டலிஷன்ஸ் திறன்களிலும் கவனம் செலுத்துகின்றன. ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1 திறனின் கீழ் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் 19 வகைகளில் 500-க்கும் அதிகமான காட்சிகளை அடையாளங் காணக்கூடிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அம்சத்தினை கொண்டுள்ளது.

கலக்கல் கேமராத்துறை.!

கலக்கல் கேமராத்துறை.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஹூவாய் பி20 ப்ரோ ஆனது ஒரு மூன்று லென்ஸ் சிஸ்டத்துடன் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் (டிஎக்ஸ்ஓமார்க் மதிப்பீட்டின்படி) இந்த கேமராக்கள் கூகுள் பிக்சல் 2 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் கேமராவை விட சிறப்பானதாகும். ஹூவாய் பி 20 ப்ரோ ஆனது ஒரு 40எம்பி ஆர்ஜிபி சென்சார், ஒரு 20எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் ஒரு 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. அப்பெஷர்களை பொறுத்தவரை எப் / 1.8, எப் / 1.6 மற்றும் எப்/ 2.4 (வைட்) கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒரு 24 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி.!

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி.!

ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இல்லை மற்றும் மைக்ரோ எஸ்டி கார்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கூட, பி20 ப்ரோ ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு திறனை கொண்டுள்ளது உடன் ஒரு 4000 எம்ஏஎச் பேட்டரித்திறனும் கொண்டுள்ளது. இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஹூவாய் பி20 ப்ரோ ஆனது ரூ.64,999/- என்கிற ஒரு பிரீமியம் விலையை கொண்டுள்ளது.வருகிற மே 3 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியாவில் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Huawei P20 Pro Lands in India for Rs 64,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X