Home
Mobile

ஏப்ரல் 24 முதல் சியோமியின் "இந்திய ஆட்டம்" அடங்கப்போகிறது; ஏன்.?

ஹூவாய் நிறுவனம், அதன் ஹூவாய் பி20 ப்ரோ உட்பட மூன்று முக்கியமான ஸ்மார்ட்போன்களை, இந்திய சந்தைக்கு அடுத்த வாரம் கொண்டு வரவுள்ளது.

By Muthuraj

இந்திய சந்தையை ஆளும், சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சியோமியை ஒரு வழி செய்து விட வேண்டும் என்கிற முடிவோடு, ஹூவாய் நிறுவனம் களம் இறங்கி விட்டது போலும். ஹூவாய் நிறுவனம், அதன் ஹூவாய் பி20 ப்ரோ உட்பட மூன்று முக்கியமான ஸ்மார்ட்போன்களை, இந்திய சந்தைக்கு அடுத்த வாரம் கொண்டு வரவுள்ளது.

வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள ஹுவாயுய் நிறுவனத்தின் வெளியீட்டு நிகழ்விற்க்கான ஊடக அழைப்புகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. வெளியான அழைப்பிதழ் ஆனது ஹூவாய் பி20 ப்ரோவின் அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெளியீட்டில் ஹூவாய் பி20 ஸ்மார்ட்போன் புறக்கணிக்கப்பட்டு, ஹூவாய் பி20 லைட் மற்றும் பி20 ப்ரோ மட்டும் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது சார்ந்த எந்தவிதமான அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாவிலை என்பதால் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.

ஒரு மூன்று பின்பக்க கேமரா அமைப்பு.!

ஒரு மூன்று பின்பக்க கேமரா அமைப்பு.!

மொத்தம் மூன்று பின்பக்க கேமராக்கள் என்கிற புத்தம் புது ஆர்வத்தை கிளப்பியப ஹூவாய் நிறுவனத்தின் பி20 தொடர் ஸ்மார்ட்போன்கள் ஆனது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கும் ஒரு வடிவமைப்பை பெற்றுள்ளன. உடன் ஹூவாய் பி20 மற்றும் பி20 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களுமே மிகவும் மேம்பட்ட கேமராக்களை கொண்டுள்ளது. ஹூவாய் பி20 ப்ரோ ஆனது ஒரு மூன்று பின்பக்க கேமரா அமைப்பை கொண்டிருக்க மறுகையில் உள்ள ஹூவாய் பி20 ஆனது ஒரு டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே.!

வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே.!

சமீபத்தில் வெளியான மற்ற தலைமை ஸ்மார்ட்போன்களை போன்றே, ஹூவாய் பி20 மற்றும் ஹூவாய் பி20 ப்ரோ ஆனது மிக மெல்லிய பெஸல்களை கொண்ட ஒரு புல் வியூ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஹூவாய் பி20 ஒரு 5.8 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்க, பெரிய மாடலான ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 6.1 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

நான்கு வண்ண மாதிரிகளில் வாங்க கிடைக்கிறது.!

நான்கு வண்ண மாதிரிகளில் வாங்க கிடைக்கிறது.!

டிஸ்பிளேவின் கீழ் உட்பொதிக்கப்ட்ட ஹோம் பட்டன் கொண்டுள்ள பி20 ப்ரோ ஒரு ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டிருக்க, மறுகையில் உள்ள பி20 ஒரு ஆர்ஜிபிடபுள்யூ டிஸ்பிளே கொண்டுள்ளது. இரண்டுமே, வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ளது. பிளாக், மிட்நைட் ப்ளூ, பின்க் கோல்ட் மற்றும் ட்வைலைட் போன்ற நான்கு வண்ண மாதிரிகளில் வாங்க கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1.!

ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1.!

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே நிறுவனத்தின் சொந்த கிரீன் 970 அக்ரா-கோர் செயலி கொண்டு இயங்குகிறது மற்றும் ஆர்டிபிஷியல் இன்டலிஷன்ஸ் திறன்களிலும் கவனம் செலுத்துகின்றது. ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1 கொண்டு இயங்குகிறது மற்றும் இதன் கேமராக்கள் 19 வகைகளில் 500-க்கும் அதிகமான காட்சிகளை அடையாளம் காணக்கூடிய ஏஐ அம்சத்தினை கொண்டுள்ளது.

ஹெட்போன் ஜாக் இல்லை மற்றும் மைக்ரோ எஸ்டி கார்ட் இல்லை.!

ஹெட்போன் ஜாக் இல்லை மற்றும் மைக்ரோ எஸ்டி கார்ட் இல்லை.!

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே, ஹெட்போன் ஜாக் இல்லை மற்றும் மைக்ரோ எஸ்டி கார்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஹூவாய் பி20 ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பும், பி20 ப்ரோ ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பும் கொண்டுள்ளது. மேலும் முறையே 3400 எம்ஏஎச் மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளன.

கலக்கல் கேமராத்துறை.!

கலக்கல் கேமராத்துறை.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஹூவாய் பி20 ப்ரோ ஆனது ஒரு மூன்று லென்ஸ் சிஸ்டத்துடன் வருகிறது. மறுகையில் உள்ள பி20 ஆனது டூயல் பின்பக்க கேமராவை கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் (டிஎக்ஸ்ஓமார்க் மதிப்பீட்டின்படி) இந்த கேமராக்கள் கூகுள் பிக்சல் 2 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் கேமராவை விட சிறப்பானதாகும்.

20எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் ஒரு 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்.!

20எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் ஒரு 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்.!

ஹூவாய் பி 20 ப்ரோ ஆனது ஒரு 40எம்பி ஆர்ஜிபி சென்சார், ஒரு 20எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் ஒரு 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. அப்பெஷர்களை பொறுத்தவரை எப் / 1.8, எப் / 1.6 மற்றும் எப்/ 2.4 (வைட்) கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ஹூவாய் பி20 ஆனது ஒரு 12எம்பி + 20எம்பி என்கிற அளவிலான டூயல் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 24எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ஹூவாய் பி20 லைட்

ஹூவாய் பி20 லைட்

இறுதியாக உள்ள, ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, 5.84 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே, கிரீன் 659 எஸ்ஓசி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி ரோம், 16 மெகாபிக்சல் + 2ம்பி அளவிலான டூயல் பின்புற கேமரா, 16 மெகாபிக்சல் முன் பக்கம் எதிர்கொள்ளும் கேமரா, பின்புறம் உட்பொதிக்கப்ட்ட மவுண்ட் வேர்டிரிண்ட் ஸ்கேனர் மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஹூவாய் பி20 லைட் விலை நிர்ணயம்.!

ஹூவாய் பி20 லைட் விலை நிர்ணயம்.!

இப்போது வரை, இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் விலை பற்றி எந்த தகவலும் இல்லை. இருப்பினும், ஹூவாய் அதன் கிரீன் 659 SoC ஸ்மார்ட்போன்களை ரூ.11,000 முதல் ரூ.18,000/- வரை என்கிற புள்ளிக்குள் விற்பனை செய்வதால் ஹூவாய் பி 20 லைட் ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.15,000 - ரூ.20,000/- என்கிற புள்ளிக்குள் தான் இருக்கும்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
ஹூவாய் பி20 ப்ரோ விலை நிர்ணயம்.!

ஹூவாய் பி20 ப்ரோ விலை நிர்ணயம்.!

ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, மிகவும் தீவிரமான விலை நிர்ணயம் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும். அதாவது இதன் அடிப்படை மாதிரியானது (6ஜிபி ரேம் + 64ஜிபி) ரூ. 39,999/- என்கிற புள்ளியை எட்டலாம், குறிப்பாக இதன் டிவைலைட் வண்ண மறுபாடானது இன்னும் கூடுதல் விலை நிர்ணயத்தை பெறலாம்.

Best Mobiles in India

English summary
Huawei P20 Pro is Heading to India Next Week. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X