வருகிற மார்ச் 27-ஆம் தேதியன்று, பாரிஸ் நகரில் நடக்குமொரு நிகழ்வில் ஹூவாய் நிறுவனத்தின் பி20, பி20 லைட் மற்றும் பி 20 ப்ரோ ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன. ஹூவாய் நிறுவனத்தின் இந்த சமீபத்திய தலைமை ஸ்மார்ட்போன்கள் பற்றி முன்னர் வெளியான பல லீக்ஸ் தகவல்களை விட தற்போது வெளியாகியுள்ள தகவல்களானது பி20 தொடர் ஸ்மார்ட்போனின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகமாக தூண்டுகிறதென்றே கூறலாம்.
வெளியாகியுள்ள சம்பீத்திய கசிவானது, மிகவும் நம்பகமான லீக்ஸ்டர்களில் ஒன்றான ரோலண்ட் குவாண்ட்டின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. வெளியான அறிக்கையின்படி, ஹூவாய் பி20 வழக்கமான ஹை-எண்ட் அம்சமான இரட்டை கேமரா அமைப்பை கொண்டிருக்க மறுகையில் உள்ள ஹூவாய் ப20 ப்ரோ ஆனது - மிகவும் சுவாரசியாமான வடிவமைப்பின்கீழ் - அதன் பின்புறத்தில் மொத்தம் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.
லேசர் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஐஆர்-ஆர்ஜிபி சென்சார்.!
ஹூவாய் நிறுவனத்தின் இதர தலைமை ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றிருப்பது பி20 ப்ரோ ஸ்மார்ட்போனில் லெயிகா பிராண்டட் கேமிராக்கள் உட்பொதிக்கப்பட்டுள்ளது. அதாவது பின்புறத்தில், ஒரு 40எம்பி சென்சார், ஒரு 20எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் ஒரு 8எம்பி டெலிஃபோட்டோ சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த சென்சார்கள் அனைத்துமே லேசர் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஐஆர்-ஆர்ஜிபி சென்சார் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் துளைகளை பொறுத்தமட்டில், எப் / 1.6 முதல் எப் / 2.4 வரையிலான அப்பெர்ஷர்தனை கொண்டிருக்கும்.
ஹைபிரிட் ஸூம்.!
இதன் 8எம்பி டெலிஃபோட்டா சென்சார் ஆனது 3எக்ஸ் லூஸ்லெஸ் ஆப்டிகல் ஜூம் திறனை வழங்கும். உடன் பி20 ப்ரோ ஆனது 5எக்ஸ் "ஹைபிரிட் ஸூம்" செயல்திறனும் கொண்டுள்ளது. இது 40எம்பி மற்றும் 8எம்பி சென்சார்களை பயன்படுத்தி கைப்பற்றப்படும் புகைப்படங்களை, மென்பொருள் செயலாக்க உதவியுடன் கையாளும்.
ப்ரோ நைட் மோட்.!
இக்கருவியின் கேமரா பயன்பாடு ஆனது 100% அதிக ஒளி மூலம் புகைப்படங்களை கைப்பற்ற உதவுமொரு பிரத்தியேக "ப்ரோ நைட் மோட்" அம்சத்தையும் கொண்டுள்ளது. உடன் இன்ஸ்டன்ட் சீன் டிடெக்ஷன் மற்றும் ஆட்டோ பிரேமிங் ஆகியவற்றை செயல்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்கீழ் இயங்கும் "ஏஐ கேமரா அசிஸ்டென்ட்" அம்சம்மும் கொண்டுள்ளது.
24எம்பி செல்பீ கேமரா.!
முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஹூஹூவாய் பி20 ப்ரோ ஆனது ஒரு நம்பமுடியாத 24எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது குறைந்த ஒளி நிலையில் கூட தெளிவான மற்றும் பிரகாசமான செல்பீக்களை கைப்பற்றி ஒரு "லைட் ஃப்யூஷன்" முறையில் வெளிப்படுத்தும்.
6.1 அங்குல அமோஎல்இடி டிஸ்ப்ளே.!
ஹவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், முழு எஎச்டி ப்ளஸ் (1080 x 2240) தீர்மானம் மற்றும் 19: 9 திரை விகிதத்துடன் கூடிய 6.1 அங்குல அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும். மிகவும் மெல்லிய பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ள இக்கருவியின் கைரேகை ஸ்கேனர் ஆனது ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், நாடி பகுதியில் அமைந்துள்ளது.
4000எம்ஏஎச் பேட்டரி.!
ஏஐ (AI) திறன்களுக்கான நரம்பியல் செயலாக்க அலகுடன் இணைந்து ஹூவாய் நிறுவனத்தின் சொந்த கிரீன் 970 சிப்செட் மூலம் பி20 ப்ரோ இயக்கப்படுகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பி மாதிரியில் மட்டுமே வெளியாகும் பி20 ப்ரோ ஆனது நிறுவனத்தின் சூப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்தின் கீழ் அடங்கும் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.
இந்திய வெளியீடு.?
ஐபி67 சான்றிதழ் பெற்றுள்ள இக்கருவி கருப்பு, நீலம் மற்றும் ட்விலைட் நிற வகைகளில் வருகிறது. குறிப்பாக இதன் ட்விலைட் நிற விருப்பமானது மிகவும் அற்புதமானமொரு மாறுபாடாக திகழுமென்பதில் சந்தேகமே வேண்டாம். இக்கருவியின் இந்திய வெளியீடு பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.