Subscribe to Gizbot

40எம்பி+ 20எம்பி+ 8எம்பி ட்ரிபிள் கேமரா; வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கணும்.!

Written By:

மொத்தம் மூன்று பின்பக்க கேமராக்கள் என்ற ஆர்வத்தை கிளப்பியப ஹூவாய் நிறுவனத்தின் பி20 மற்றும் பி20 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒருவழியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இனி நாம் சேயாய் வேண்டியதெல்லாம் இந்த ஸ்மார்ட்போன்களை நம்பி வாங்கலாமா வேண்டாமா என்பதை ஆராய வேண்டியது மட்டும் தான்.

40எம்பி+ 20எம்பி+ 8எம்பி; வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கணும்.!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கும் ஹூவாய் பி20 மற்றும் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆனது மிகவும் மேம்பட்ட கேமரா மற்றும் ஒரு அற்புதமான முனைகளை கொண்டுள்ளது. ஹூவாய் பி20 ப்ரோ ஆனது ஒரு மூன்று பின்பக்க கேமரா அமைப்பை கொண்டிருக்க மறுகையில் உலா ஹூவாய் பி20 ஆனது ஒரு டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே.!

வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே.!

சமீபத்தில் வெளியான மற்ற தலைமை ஸ்மார்ட்போன்களை போன்றே, ஹூவாய் பி20 மற்றும் ஹூவாய் பி20 ப்ரோ ஆனது மிக மெல்லிய பெஸல்களை கொண்ட ஒரு புல் வியூ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஹூவாய் பி20 ஒரு 5.8 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்க, பெரிய மாடலான பி20 ப்ரோ ஒரு 6.1 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது.

நான்கு நிறங்களில் வாங்க கிடைக்கும்.!

நான்கு நிறங்களில் வாங்க கிடைக்கும்.!

டிஸ்பிளேவின் கீழ் உட்பொதிக்கப்ட்ட ஹோம் பட்டன் கொண்டுள்ள பி20 ப்ரோ ஒரு ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டிருக்க மறுகையில் உள்ள பி20 ஒரு ஆர்ஜிபிடபுள்யூ டிஸ்பிளே கொண்டுள்ளது. இரண்டுமே, வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ளது மற்றும் பிளாக், மிட்நைட் ப்ளூ, பிங்க் கோல்ட் மற்றும் ட்வைலைட் ஆகிய நான்கு நிறங்களில் வாங்க கிடைக்கும்.

விலை நிர்ணயம்.!

விலை நிர்ணயம்.!

ஹூவாய் பி20 ஆனது ரூ.52,000/- என்ற புள்ளியிலும், பி20 ப்ரோ ஆனது ரூ.72,000/- என்ற புள்ளியிலும் தொடங்கும். துல்லியமான இந்திய விலை நிர்ணயம் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே நிறுவனத்தின் சொந்த கிரீன் 970 அக்ரா-கோர் செயலி கொண்டு இயங்குகிறது மற்றும் ஆர்டிபிஷியல் இன்டலிஷன்ஸ் திறன்களிலும் கவனம் செலுத்துகின்றன.ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1 கொண்டு இயங்குகிறது மற்றும் இதன் கேமராக்கள் 19 வகைகளில் 500-க்கும் அதிகமான காட்சிகளை அடையாளங் காணக்கூடிய ஏஐ அம்சத்தினை கொண்டுள்ளது.

ரேம் மற்றும் சேமிப்பு

ரேம் மற்றும் சேமிப்பு

இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே, ஹெட்போன் ஜாக் இல்லை மற்றும் மைக்ரோ எஸ்டி கார்ட் இல்லை. இருப்பினும் கூட பி20 ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பும், பி20 ப்ரோ ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பும், முறையே 3400 எம்ஏஎச் மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளன.

How to check PF Balance in online (TAMIL)
24எம்பி செல்பீ.!

24எம்பி செல்பீ.!

ஹூவாய் பி 20 ப்ரோ ஆனது ஒரு 40எம்பி ஆர்ஜிபி சென்சார், ஒரு 20எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் ஒரு 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. அப்பெஷர்களை பொறுத்தவரை எப் / 1.8, எப் / 1.6 மற்றும் எப்/ 2.4 (வைட்) கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ஹூவாய் பி20 ஆனது ஒரு 12எம்பி + 20எம்பி என்கிற அளவிலான டூயல் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 24எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Huawei P20, P20 Pro launched: Price, specifications, and details of camera. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot