ஹூவாய் பி20 மற்றும் பி20 ப்ரோ : இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை.!

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஹூவாய் பி20 மற்றும் ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையே சுமார் ரூ.52,250) மற்றும் ரூ.72,300/-க்கு விற்பனை செய்யப்படலாம்.

|

கடந்த மாதம் உலகளாவிய வெளியீட்டை சந்தித்த ஹூவாய் பி20 மற்றும் ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

ஹூவாய் பி20 மற்றும் பி20 ப்ரோ : இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை.!

இந்திய விற்பனையின் துல்லியமான தேதி வெளியாகவில்லை என்றாலும் கூட, வெளியான உத்தியோகபூர்வ ட்விட்டரின் படி, ஹானர் பி20 தொடர் கருவிகள் இந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் என்பதை அறிவிக்கிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஹூவாய் பி20 மற்றும் ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையே சுமார் ரூ.52,250) மற்றும் ரூ.72,300/-க்கு விற்பனை செய்யப்படலாம்.

வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே.!

வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே.!

அம்சங்களை பொறுத்தவரை, சமீபத்தில் வெளியான மற்ற நிறுவனங்களின் தலைமை ஸ்மார்ட்போன்களை போன்றே, ஹூவாய் பி20 மற்றும் ஹூவாய் பி20 ப்ரோ ஆனது மிக மெல்லிய பெஸல்களை கொண்ட ஒரு புல்-வியூ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஹூவாய் பி20 ஒரு 5.8 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்க, பெரிய மாடலான பி20 ப்ரோ ஒரு 6.1 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது.

நான்கு நிறங்களில் வாங்க கிடைக்கும்.!

நான்கு நிறங்களில் வாங்க கிடைக்கும்.!

டிஸ்பிளேவின் கீழ் உட்பொதிக்கப்ட்ட ஹோம் பட்டன் கொண்டுள்ள பி20 ப்ரோ ஒரு ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டிருக்க மறுகையில் உள்ள பி20 ஒரு ஆர்ஜிபிடபுள்யூ டிஸ்பிளே கொண்டுள்ளது. இரண்டுமே, வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ளது மற்றும் பிளாக், மிட்நைட் ப்ளூ, பிங்க் கோல்ட் மற்றும் ட்வைலைட் ஆகிய நான்கு நிறங்களில் வாங்க கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1.!

ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1.!

இரண்டு ஸ்மார்ட்போன்களுமே நிறுவனத்தின் சொந்த கிரீன் 970 அக்ரா-கோர் செயலி கொண்டு இயங்குகிறது மற்றும் ஆர்டிபிஷியல் இன்டலிஷன்ஸ் திறன்களிலும் கவனம் செலுத்துகின்றன. ஆண்ட்ராய்டு 8.1 அடிப்படையிலான இஎம்யூஐ 8.1 கொண்டு இயங்குகிறது மற்றும் இதன் கேமராக்கள் 19 வகைகளில் 500-க்கும் அதிகமான காட்சிகளை அடையாளங் காணக்கூடிய ஏஐ அம்சத்தினை கொண்டுள்ளது.

ரேம் மற்றும் சேமிப்பு

ரேம் மற்றும் சேமிப்பு

இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே, ஹெட்போன் ஜாக் இல்லை மற்றும் மைக்ரோ எஸ்டி கார்ட் இல்லை. இருப்பினும் கூட பி20 ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பும், பி20 ப்ரோ ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பும், முறையே 3400 எம்ஏஎச் மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளன.

கலக்கல் கேமராத்துறை.!

கலக்கல் கேமராத்துறை.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஹூவாய் பி20 ப்ரோ ஆனது ஒரு மூன்று லென்ஸ் சிஸ்டத்துடன் வருகிறது. மறுகையில் உள்ள பி20 ஆனது டூயல் பின்பக்க கேமராவை கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் (டிஎக்ஸ்ஓமார்க் மதிப்பீட்டின்படி) இந்த கேமராக்கள் கூகுள் பிக்சல் 2 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் கேமராவை விட சிறப்பானதாகும்.

24எம்பி  செல்பீ.!

24எம்பி செல்பீ.!

ஹூவாய் பி 20 ப்ரோ ஆனது ஒரு 40எம்பி ஆர்ஜிபி சென்சார், ஒரு 20எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் ஒரு 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. அப்பெஷர்களை பொறுத்தவரை எப் / 1.8, எப் / 1.6 மற்றும் எப்/ 2.4 (வைட்) கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ஹூவாய் பி20 ஆனது ஒரு 12எம்பி + 20எம்பி என்கிற அளவிலான டூயல் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 24எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei P20, P20 Pro launch in India confirmed: Price, availability & more. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X