ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ & டூயல் கேமரா வசதியுடன் வெளிவரும் ஹூவாய் பி20 லைட்.!
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் பி-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளியாகி வருகிறது, அந்தவகையில் தற்சமயம் ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது. இந்த ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் டூயல் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனில் பெசல்-லெஸ் வடிவமைப்பு மற்றும 18:9என்ற திரைவிகிதம் இடமபெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மாரட்போனின் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
புகைப்படம் நன்றி : ComputerHoy.com

ஹூவாய் பி20 லைட் :
ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனில் கிரின் 970 சிப்செட் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா எல்இடி பிளாஷ் ஆதரவுடன் வெளிவரும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


3000எம்ஏஎச்:
ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனில் 2900எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications