ஐபோன் எக்ஸ்-ஐ மறந்துடுங்க; மிரட்டும் அம்சங்களுடன் அறிமுகமானது பி20 லைட்.!
ஒரு 5.84 அங்குல முழு எச்டி+ (1080x2280 பிக்சல்கள்) புல் வியூ 19: 9 டிஸ்ப்ளே, ஒரு ஹைசிலிகான் க்ரீன் 659 எஸ்ஓசி, 4ஜிபி ரேம், மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
ஹூவாய் நிறுவனத்தின் முக்கியமான ஸ்மார்ட்போன் வரிசையாக கருதப்படும் பி20 தொடரின்கீழ் மேலுமொரு ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியான முறையில் கிடைக்கப்பெற்ற ஹூவாய் பி20, பி20 ப்ரோ மற்றும் பி20 லைட் லீக்ஸ் தகவல்களை தொடர்ந்து, தற்போது அதிகாரப்பூரவமான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதாவது ஹூவாய் நிறுவனம், போலந்தில் தனது நுகர்வோர் இணையத்தளத்தில் பி20 லைட் ஸ்மார்ட்போனை பட்டியலிட்டுள்ளது, மேலும் அது முன்பதிவுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 27-ஆம் தேதி பாரிஸ் நகரில் நடக்குமொரு நிகழ்வில் தான் இந்த மூன்று (பி20, பி20 ப்ரோ மற்றும் பி20 லைட்) கருவிகளும் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4ஜிபி ரேம், மற்றும் 64ஜிபி
வடக்கிலிருந்து தொடங்கி விரைவில் இந்திய சந்தைக்குள்ளும் நுழையுமென எதிர்பார்க்கப்படும் ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 5.84 அங்குல முழு எச்டி+ (1080x2280 பிக்சல்கள்) புல் வியூ 19: 9 டிஸ்ப்ளே, ஒரு ஹைசிலிகான் க்ரீன் 659 எஸ்ஓசி, 4ஜிபி ரேம், மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

பேஸ் ஐடி
மேலும் இக்கருவி ஒரு செங்குத்து இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதாவது அதன் பின்புலத்தில், 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார் இடம்பெற்றுள்ளது. ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும் பி20 லைட் ஆனது என்எப்சி ஆதரவு, பேஸ் ஐடி, ஆண்ட்ராய்டு ஓரியோவின் மேல் இயங்கும் இஎம்யூஐ 8.0 ஆகிய ஆதரவுகளை கொண்டுள்ளது.


விலை நிர்ணயம்
சுமார் ரூ.30,300/- என்கிற இந்திய விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவி கருப்பு, நீலம், மற்றும் பிங்க் நிற வகைகளில் வாங்க கிடைக்கலாம். இக்கருவியின் துல்லியமான இந்திய வெளியீடு மற்றும் விலை நிர்ணயம் சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications