ரூ.19,999/-க்கு ஏற்ற நியாயமான அம்சங்கள் தான்; ஆனால் நம்பி வாங்கலாமா.?
ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் இணைந்து, சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஹூவாய் அதன் பி20 லைட் ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் இணைந்து, சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஹூவாய் அதன் பி20 லைட் ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.20,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது மோட்டோ எக்ஸ் 4, ஒப்போ எப்7 மற்றும் விவோ வி9 போன்ற ஸ்மார்ட்போன்களை ஒரு வழி செய்துவிடும் என்றே தோன்றுகிறது.

தோற்றத்தில் மட்டுமின்றி, ஹூவாய் பி20 லைட் ஆனது ஒப்போ எப்7 மற்றும் விவோ வி9 ஸ்மார்ட்போனின் தன்னியக்க கேமரா பிரிவுடன் போட்டியிடுகிறது. ரூ.19,999/- என்கிற இந்திய விலை நிர்ணயமானது மோட்டோ எக்ஸ்4 உடன் போட்டியிடுகிறது. வருகிற மே 3 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியாவில் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் ஹூவாய் பி20-ன் அம்சங்கள் என்ன.? இதை நம்பி வாங்கலாமா என்பதை விரிவாக காணலாம்.

5.8 இன்ச் டிஸ்ப்ளே.!
ப்ளூ, சகுரா பிங்க் மற்றும் மிட் நைட் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்கள் வெளியாகியுள்ள ஹூவாய் பி20 லைட் ஆனது 5.8 இன்ச் டிஸ்ப்ளே, 2280 x 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 19: 9 என்கிற திரை விகிதத்தை கொண்டுள்ளது. வடிவமைப்பை பொறுத்தவரை, ஒப்போ எப்7 மற்றும் விவோ வி9 போன்றே ஐபோன் எக்ஸ்-ன் வடிவமைப்பு மொழியை பின்பற்றியுள்ளது. உடன் வெளியான பி20 ப்ரோ போல் இல்லாமல், பி20 லைட் ஆனது அதன் கைரேகை ஸ்கேனர்ரை பின்பக்கத்தில் கொண்டுள்ளது.

ரூ.10,999/- முதல் ரூ.19,999/- என்கிற அடைப்பு குறிக்குள்.!
பி 20 லைட் ஆனது ஹூவாய் நிறுவனத்தின் ஆக்டா-கோர் கிரீன் 659 SoC கொண்டு இயங்கும் நான்காவது ஸ்மார்ட்போன் ஆகும் என்பதும், இந்த தேதிக்கு மிகவும் விலை உயர்ந்த சிப்செட் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் கூட, ஹூவாய் நிறுவனத்தின் நான்கு கிரீன் 659 SoC ஸ்மார்ட்போன்களுமே ரூ.10,999/- முதல் ரூ.19,999/- என்கிற அடைப்பு குறிக்குள் உள்ளேயே தான் விற்பனையை சந்திக்கின்றன.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு.!
கிரீன் 659 SoC உடன் தொடங்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் ஹானர் 9ஐ ஆகும். பின்னர் ஹானர் 7எக்ஸ், ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றது. இப்போது பி20 லைட்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளது. உடன் ஹானர் பி20 லைட் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு என்கிற ஒற்றை மாறுபாட்டில் வருகிறது. சேமிப்பக விரிவாக்கத்திற்காக ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஒன்றும் உள்ளது.

24எம்பி செல்பீ கேமரா
சர்வதேச பதிப்புகளுடன் ஒப்பிடும்போது, ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு மிகவும் மேம்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், அதன் முன்பக்கத்தில் ஒரு 24எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. அது ஒரு சோனி IMX578 சென்சார் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 16எம்பி முதன்மை சென்சார் மற்றும் ஒரு 2எம்பி இரண்டாம் நிலை டெப்த் சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ.!
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான EMUI 8.0 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் சில செயற்கை நுண்ணறிவு அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. உடன் முன்னர் குறிப்பிட்டபடி, பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை ஸ்கேனர், இரட்டை சிம் ஆதரவு, 3000mAh பேட்டரி, 4G LTE, VoLTE, வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்-சி மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications