மார்ச் 27 : பின்புறம் மூன்று கேமராக்களுடன் வெளிவரும் ஹூவாய் பி20.!

By Prakash
|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூவாய் பி20 ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 27-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஹூவாய் நிறுவனம். இந்த ஹூவாய் பி20 ஸ்மார்ட்போன் மாடல் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்த நிலையில் தற்சமயம் இதன் அறிமுகம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறம் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் கைரேகை ஸ்கேனர், ஹோம் பட்டன் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மார்ச் 27 : பின்புறம் மூன்று கேமராக்களுடன் வெளிவரும் ஹூவாய் பி20.!

ஹூவாய் பி20 ஸ்மார்ட்போனில் 24மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40மெகாபிக்சல் கொண்ட லென்ஸ் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு போட்டியா வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹூவாய் பி20 ஸ்மார்ட்போன் 6.1-இன்ச் பெசல்லெஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு2160 x 1080 என்ற பிக்சல் தீர்மானம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மார்ச் 27 : பின்புறம் மூன்று கேமராக்களுடன் வெளிவரும் ஹூவாய் பி20.!

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு இந்த ஹூவாய் பி20 ஸ்மார்ட்போன் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஹூவாய் பி20 ஸ்மார்ட்போனில் கிரின் 970 சிப்செட் வழங்கப்படலாம், மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Oppo F5 Sidharth Limited Edition Unboxing (TAMIL)

மார்ச் 27 : பின்புறம் மூன்று கேமராக்களுடன் வெளிவரும் ஹூவாய் பி20.!

ஹூவாய் பி20 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei P20 launch confirmed on March 27 press invite hints at triple camera setup ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X