3 லென்ஸ் கொண்ட 40 எம்பி ரியர் + 24 எம்பி செல்பீயுடன் மிரட்டும் ஹூவாய் பி11.!
ஹூவாய் நிறுவனம் அதன் முதன்மை பி தொடர்வரிசையில் கருவிகளில் மிக உயர்ந்த கேமரா அமைப்பு கொண்ட ஒரு சாதனத்தை தயாரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய லீக்ஸ் தகவல் உண்மையாக இருந்தால், ஹூவாய் நிறுவனம் தொடங்கும் அடுத்தகட்ட ஸ்மார்ட்போன் ஒன்றில் உலகின் சிறந்த கேமராகக்ள இடம்பெறலாம். ஆம், சமீபத்திய லீக்ஸ் தகவலொன்றின் கீழ், ஹூவாய் நிறுவனம் அதன் முதன்மை பி தொடர்வரிசையில் கருவிகளில் மிக உயர்ந்த கேமரா அமைப்பு கொண்ட ஒரு சாதனத்தை தயாரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கசிவு பிரபலமான டிப்ஸ்டர் ஆன இவான் பிளஸிலிடமிருந்து வந்துள்ளது. உடன் ஹூவாய் நிறுவனத்தின் போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் ஆனது - "நான் புகைப்படங்களை எடுக்க விரும்பவில்லை, உருவாக்க விரும்புகிறேன்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

மூன்று லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பு
அந்த போஸ்டர் ஆனது, கூறப்படும் ஹூவாய் பி தொடர் கருவியை சுட்டிக்காட்டுவதாகவும், அக்கருவி 40எம்பி லெயக்கா 5x கலப்பின ஜூம் கொண்ட மூன்று லென்ஸ் கேமரா அமைப்பை கொண்டுவருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இக்கருவி ஒரு 24எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவையும் கொண்டுவரலாம்.

ஹூவாய் பி11
ஆக, வருங்கால பி தொடர் ஸ்மார்ட்போன்களில் இந்த அளவிலான கேமரா மேம்படுத்தல் நிகழ்த்தப்படும், இமேஜிங் அதிகார மையமாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்ட நிலைப்பாட்டில், ஹூவாய் பி11 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் பற்றிய சில தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

"ப்ரோ" இரவு பயன்முறை
கூறப்படும் பி11 ஸ்மார்ட்போனில் "புதிய சென்சார் மற்றும் ஒளியியலின்" முழு நன்மைகளையும் எடுத்துக் கொள்ளும் ஒரு பிரத்யேக "ப்ரோ" இரவு பயன்முறை இடம்பெறும், இது "100 சதவிகிதம் அதிக ஒளி" யை கைப்பற்றும் திறன் கொண்டதென்று கூறப்படுகிறது.

ஆட்டோ ஃப்ரேமிங்
பின்னர் ஒரு ப்ரோ ஏஐ கேமரா ஒன்றும் இடம்பெறுகிறது, இது தானியங்கி "காட்சி அங்கீகாரம்" மற்றும் "ஆட்டோ ஃப்ரேமிங்" போன்ற விடயங்களைச் செய்யக்கூடியது. இறுதியாக "நிகழும் ஒவ்வொரு நிமிடத்தையும் எளிமையான முறையில் கைப்பற்றுவதற்கு இது உதவும்" என்று சுவரொட்டியின் விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பிட்கள்
எந்த சந்தர்ப்பத்திலும், ஹூவாய் நிறுவனம் அதன் பி11 ஸ்மார்ட்போனில் - மிகவும் வேகமாக வளரும் - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இணைக்கலாம் என்பதை சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஹானர் வி10 ஸ்மார்ட்போன் உறுதிப்படுத்தியுள்ளது. ஏனெனில் இயக்கருவியில் சில ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பிட்கள் இடம்பெற்றுள்ளன.

வன்பொருள் மற்றும் மென்பொருள்
இருந்தாலும் கூட, இத்தகைய ஒரு சிறிய தகவலை வைத்துக்கொண்டு நாம் எந்தவொரு தீர்க்கமான முடிவிற்கும் வந்துவிட முடியாது. கேமரா அம்சங்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே தற்போது வரை கிடைக்கப்பெற்றுள்ளது. இக்கருவியின் வன்பொருள் மற்றும் மென்பொருள் பகுதிகளை பொறுத்தே இதன் மாபெரும் வெற்றி உறுதி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications