கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் ஹூவாய் பி11 லைட்.!

Written By:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹூவாய் பி11 லைட் ஸ்மார்ட்போன் மாடலை வரும் 2018-ம் ஆண்டு துவகத்தில் அறிமுக்படுத்த திட்டமிட்டுள்ளது ஹூவாய் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

ஹூவாய் பி11 லைட் கருப்பு மற்றும் தங்கம் இரண்டு வண்ணங்களில்  வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹூவாய் பி11 லைட் ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்பிளே மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹூவாய் பி11 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, மேலும் அட்டகாசமான கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஹூவாய் பி11 லைட் ஸ்மார்ட்போன் மாடல் முதலில் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்ப்பட்டுள்ளது.English summary
Huawei P11 Lite mockups spotted online iPhone X like design and more; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot