Home
Mobile

மார்கெட்ட மிரட்டிவிட்டாப்ல.. OLED டிஸ்பிளே.. AIS கேமரா.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 4400mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஃபிளிப் போன் மார்கெட்டே மிரளும்படியான பட்ஜெட்டில் ஓஎஸ்இடி டிஸ்பிளே, ஏஐஎஸ் கேமரா, 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மற்றும் 4400mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ஹூவாய் நோவா பிளிப் (HUAWEI nova Flip) போன் களமிறங்கி இருக்கிறது. 10x டிஜிட்டல் ஜூம், டாவின்சி போர்ட்ராய்டு என்ஜின், 66W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற மற்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த ஹூவாய் நோவா பிளிப் மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்

ஹூவாய் நோவா பிளிப் அம்சங்கள் (HUAWEI nova Flip Specifications): இந்த நோவா மாடலில் 2.14 இன்ச் (480 × 480 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) அவுட்டர் டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஏஐ எச்டிஆர் (AI HDR) கொண்ட 6.94 இன்ச் (2690 × 1136 பிக்சல்கள்) மெயின் டிஸ்பிளே வருகிறது.

மார்கெட்!ட மிரட்டிவிட்டாப்ல.. OLED டிஸ்பிளே.. AIS கேமரா.. 12GB ரேம்!

இதுவொரு எல்டிபிஓ ஓஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1440Hz PWM ஃபிரிகான்சி டிம்மிங் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்டிருக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் பிரீமியம் அவுட்புட் கிடைக்கும்.

இந்த ஹூவாய் நோவா பிளிப் போனில் ஹார்மனிஓஎஸ் 4.2 (HarmonyOS 4.2) வருகிறது. சிப்செட் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், டைமன்சிட்டி 8000 சிப்செட்டுக்கு நிகரான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் கிரின் 8000 எஸ்ஓசி (Kirin 8000 SoC) சிப்செட் இருப்பதாக தெரிகிறது.

மிட்-ரேஞ்ச் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு இடம் பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நோவா பிளிப் போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

மார்கெட்!ட மிரட்டிவிட்டாப்ல.. OLED டிஸ்பிளே.. AIS கேமரா.. 12GB ரேம்!

மேலும், 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் விற்பனைக்கு வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா +8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. வைடு ஆங்கிள் கேமராவில் மேக்ரோ ஷூட் சப்போர்ட் உள்ளது. 10x டிஜிட்டல் ஜூம் சப்போர்ட் உள்ளது.

அதேபோல 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. மேலும், ஏஐ இமேஜ் ஸ்டெபிளைசேஷன் (AI Image Stabilization) டெக்னாலஜி கொண்டிருக்கிறது. 32 எம்பி வைடு ஆங்கிள் செல்பீ ஷூட்டர் வருகிறது. ஹூவாய் டாவின்சி போர்ட்ராய்டு என்ஜின் 2.0 (Huawei DaVinci Portrait Engine 2.0) வருகிறது.

ஆகவே, போர்ட்ராய்டு மற்றும் நைட் போட்டோகிராபியில் பிரீமியம் குவாலிட்டி எதிர்பார்க்கலாம். மேலும், போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் சீன் மோட் (Night Scene Mode), வாய்ஸ்-ஆக்டிவேட் போட்டோ (Voice Activate Photo), ப்ரொபஷனல் மோட் (Professional Mode) உள்ளிட்ட கேமரா பீச்சர்கள் வருகின்றன.

இந்த ஹூவாய் நோவா பிளிப் போனில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4400mAh பேட்டரி வருகிறது. டூயல் சிம் சப்போர்ட் உள்ளது. நியூ கிரீன் (New Green), ஜீரோ ஒயிட் (Zero White), சகுரா பிங்க் (Sakura Pink) மற்றும் ஸ்டார்ரி பிளாக் (Starry Black) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.62,298ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.67,005ஆகவும், 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.76,430ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HUAWEI nova Flip with 12GB RAM 50MP Camera 4400mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X