Home
Mobile

அசத்தலான ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹூவாய் நிறுவனம் மலேசியாவில் தனது புதிய ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் உட்பட பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தலான ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி Edgeless டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2376 பிக்சல்கள், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர EMUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

அசத்தலான ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்டுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 3.5 மிமீ ஹெட்ஹோன் ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், புளூடூத், 4ஜி வோல்ட்இ, வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

அசத்தலான ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் சார்ஜர் உதவியுடன் 17 நிமிடங்களில் 60 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவலின்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இந்த ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.23,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei nova 8i Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X