நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகமாகும் ஹுவாய் நோவா 8 எஸ்இ: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

|

ஹுவாய் நோவா 8 எஸ்இ ஸ்மார்ட்போன் நவம்பர் 5 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் செவ்வக வடிவத்தில் நான்கு கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம்.

ஹுவாய் நோவா 8 எஸ்இ

ஹுவாய் நோவா 8 எஸ்இ

ஹுவாய் கடந்த ஏப்ரல் மாதத்தில் நோவா 7 எஸ்இ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. தற்போது நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நோவா 8 எஸ்இ என அழைக்கப்படுகிறது. இந்த சாதனம் இந்த வாரத்தில் தொடங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பாக ஸ்மார்ட்போன் புகைப்படங்கள், தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன.

நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகம்

நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகம்

டிஜிட்டல் சேட் ஸ்டேஷன் வழியாக ஹுவாய் நோவா 8 எஸ்இ புகைப்படங்கள் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன் 12 ஐ போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் செவ்வக வடிவ கேமரா உள்ளது. இதில் நான்கு பின்புற கேமரா இருக்கும் என தெரிகிறது

ப்ளூ மற்றும் வெள்ளை வண்ணங்கள்

ப்ளூ மற்றும் வெள்ளை வண்ணங்கள்

கசிவான தகவலின்படி ஸ்மார்ட்போன் ப்ளூ மற்றும் வெள்ளை வண்ணங்களில் நோவா 8 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. கூடுதல் வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்குமா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இனி இந்த நேரத்தில் ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம்: அறிவிப்பு வெளியிட்ட வங்கி!இனி இந்த நேரத்தில் ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம்: அறிவிப்பு வெளியிட்ட வங்கி!

யூஎஸ்பி டைப்சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர்

யூஎஸ்பி டைப்சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர்

ஸ்மாரட்போன் இடதுபக்கத்தில் சிம் கார்ட் ஸ்லாட் இருக்கும் என தெரிகிறது. ஸ்மார்ட்போன் வலது பக்கத்தில் கன்ட்ரோல் பட்டன்களும் இருக்கிறது. நோவா 8 எஸ்இ ஸ்மார்ட்போனின் அடிப்பகுதியில் யூஎஸ்பி டைப்சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் இருக்கும் என தெரிகிறது. வாட்டர் டிராப் நாட்ச் செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கும் என டிப்ஸ்டர் கசிவு தகவல் மூலம் தெரிகிறது.

6.53 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே

6.53 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே

ஹுவாய் நோவா 8 எஸ்இ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் காட்சி முழு எச்டி ப்ளஸ் 60 ஹெட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் இருக்கும். இதில் 64 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரண்டு 2 எம்பி சென்சார்கள் உள்ளன.

இந்திய வெளியீடு குறித்து தகவல் விரைவில்

இந்திய வெளியீடு குறித்து தகவல் விரைவில்

ஹுவாய் நோவா 8 எஸ்இ நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாக உள்ளன. இந்திய சந்தை உட்பட உலக சந்தையில் வெளியீடு குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி அம்சத்தோடு இருக்குமா என்பது தெரியவில்லை. இந்திய வெளியீடு குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

file images

Best Mobiles in India

English summary
Huawei Nova 8 Se May Launched on November 5 with Four cameras: here the Expected Details!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X