8 ஜிபி ரேம், 66W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தோடு Huawei Nova 8 SE அறிமுகம்!

|

ஹுவாய் நிறுவனம் ஹுவாய் நோவா 8 எஸ்இ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நான்கு பின்புற கேமராக்கள், 8 ஜிபி ரேம் மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது.

ஹுவாய் நோவா 8 எஸ்இ

ஹுவாய் நோவா 8 எஸ்இ

ஹுவாய் நிறுவனம் நோவா 8 தொடரின் முதல் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஹுவாய் நோவா 8 எஸ்இ மாடலாகும். இந்தாண்டு ஏப்ரல் மாதம் ஹுவாய் நோவா 7 எஸ்இ அறிமுகம் செய்யப்பட்டது. ஹுவாய் நோவா 8 எஸ்இ இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஹுவாய் நோவா 8 எஸ்இ விலை

ஹுவாய் நோவா 8 எஸ்இ விலை

ஹுவாய் நோவா 8 எஸ்இ 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை சீனாவில் சிஎன்ஒய் 2,599 ஆகும். இந்திய மதிப்பின்படி ரூ.29,100 ஆகும். நோவா 8 எஸ்இ உயர்மதிப்பு மாறுபாடான 8 ஜிபி மற்றும் 128 ஜிபி சிஎன்ஒஸ் 2,699 ஆகும். இந்திய மதிப்பின்பிட ரூ.30,200 ஆகும். இது டீப் சீ ப்ளூ, மேஜிக் நைட் பிளாக், சில்வர் மூன் ஸ்டார்ஸ் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இது தற்போது சீனாவில் முன்பதிவுக்கு கிடைக்கிறது. நவம்பர் 11முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுவாய் நோவா 8 எஸ்இ: அம்சங்கள்

ஹுவாய் நோவா 8 எஸ்இ: அம்சங்கள்

ஹுவாய் நோவா 8 எஸ்இ ஆண்ட்ராய்டு 10 அடிப்படையில் இயக்கப்படுகிறது. நோவா 8 எஸ்இ ஸ்மார்ட்போன் இஎம்யூஐ 10.1 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) எல்இடி டிஸ்ப்ளே இருக்கிறது. நோவா 8 எஸ்இ உயர் பதிப்பு ஆக்டோ கோர் 800 யுஎஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. நோவா 8 எஸ்இ ஆக்டோ கோர் பரிமாணத்தின் மூலம் 720 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் 8 ஜிபி ரேம் இருக்கிறது.

Whatapp அறிமுகம் செய்த புதிய அம்சம்: இனி ஒரு கிளிக் போதும் எளிதாக இதை செய்யலாம்!Whatapp அறிமுகம் செய்த புதிய அம்சம்: இனி ஒரு கிளிக் போதும் எளிதாக இதை செய்யலாம்!

குவாட் கேமரா அமைப்பு

குவாட் கேமரா அமைப்பு

ஹுவாய் நோவா 8 எஸ்இ குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரண்டு 2 எம்பி கேமராக்கள் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளது. இதில் 10 எக்ஸ் டிஜிட்டல் வீடியோ ஜூம் மற்றும் 4 கே ரெக்கார்டிங் ஆதரவு இருக்கிறது.

66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஹுவாய் நோவா 8 எஸ்இ ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. இரண்டிலும் 128 ஜிபி சேமிப்பு இருக்கிறது. இணைப்பு ஆதரவுகளாக 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.1 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். ஹுவாய் நோவா 8 எஸ்இ 3,800 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனருடன் வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Huawei Nova 8 SE Launched With 8GB RAM and 66W Fast Charging Support

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X