ஐபோன் மாடல்களுக்கு போட்டியாக ஹூவாய் நோவா 7ஐ அறிமுகம்.!
மலேசியாவில் ஹூவாய் நிறுவனம் தனது நோவத 7ஐ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக ஐபோன் மாடல்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே
ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிங்கிள் பன்ச்-ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பு இவற்றில்இடம்பெற்றுள்ளது.

எதிர்பார்த்த சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஹைசிலிகான் கிரிண் 810சிப்செட் வசதி உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி3 ஜிபியு இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஹூவாய் நோவா 7ஐ கேமரா வசதி
ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

ஹூவாய் நோவா 7ஐ பேட்டரி வசதி
ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போனில் 4200எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 40வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போனின் விலை
ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போனின் விலை RM 1,099-ஆக உள்ளது (இந்திய மதிப்பில் 18,900). மேலும் இந்த சாதனம்கருப்பு, பிங்க், பசுமை போன்ற நிறங்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications