அட்டகாச வடிவமைப்பில் அறிமுகமாகும் ஹூவாய் நோவா 7 எஸ்இ- முழு விவரங்கள்!

|

நோவா 7 மற்றும் நோவா 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹூவாய் நோவா 7 எஸ்இ வெளியானது. ஹூவாய் நோவா 7 எஸ்இ 5ஜி திறன், க்ரின் 820 சிப்செட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு பின் நிறுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் பாகங்களில் மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

ஹூவாய் நோவா 7 எஸ்இ

ஹூவாய் நோவா 7 எஸ்இ

ஹூவாய் நோவா 7 எஸ்இயின் புதிய பதிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெய்போவில் உள்ள பயனரிடமிருந்து இந்த தகவல் பெறப்பட்டது. ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை வெளிப்படுத்தும் போஸ்ட்கள் முன்னதாக பகிரப்பட்டது. இதன்மூலம் ஹூவாய் நோவா 7 எஸ்.இ.யின் புதிய பதிப்பு முன்னதாக வெளியான வடிவமைப்புக்கு ஒத்ததாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவாட் கேமரா அமைப்பு

குவாட் கேமரா அமைப்பு

ஹூவாய் நோவா 7 எஸ்இ பின்புறத்தில் செங்குத்தாக பொருத்தப்பட்ட குவாட் கேமரா அமைப்பு மற்றும் பஞ்ச்-ஹோல் வடிவமைப்புடன் வருகிறது. வெளியான டீசர்களில் கிடைத்த தகவல்படி நோவா 7 எஸ்இ 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா இருக்கும் என்றும் 40வாட் சூப்பர்சார்ஜ் ஆதரவுடன் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் தெரிகிறது.

ஹூவாய் நோவா 7 எஸ்இ: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ஹூவாய் நோவா 7 எஸ்இ: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ஹூவாய் நோவா 7 எஸ்இயின் புதிய பதிப்பு மீடியா டெக் டைமன்ஷன் 800 யூ எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஹவாய் நோவா எஸ்.இ. வைட்டலிட்டி பதிப்பு ஒரே ஒரு ஒரே சேமிப்பு வேரியண்டில் கிடைக்கும். அதாவது புதிய ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது.

வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் போன் மெமரியில் தானாக நிரம்புவதை நிறுத்துவது எப்படி?வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் போன் மெமரியில் தானாக நிரம்புவதை நிறுத்துவது எப்படி?

முழு எச்டி+ தெளிவுத்திறன்

முழு எச்டி+ தெளிவுத்திறன்

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 அங்குல எல்சிடி பேனலைக் கொண்டுள்ளது. இதில் முழு எச்டி+ தெளிவுத்திறன், பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போன் ஒரு பக்கத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. ஸ்மார்ட்போன் மேற்புற ஓரத்தில் சிறிய துளை கொண்ட கேமரா உள்ளது. இது 16 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகும். பின்புறத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் கொண்டுள்ளது.

40W சூப்பர்சார்ஜிங் அம்சம்

40W சூப்பர்சார்ஜிங் அம்சம்

இதில் 40W சூப்பர்சார்ஜிங் தொழில்நுட்பம் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ விலை குறித்த எந்த தகவலும் இல்லை என்றாலும் இது 2,399 யுவான் (சுமார் ரூ.26,100) விற்பனை செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Huawei Nova 7 Launching on October 16 With 5G Vitality Edition: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X