64எம்பி கேமராவுடன் ஹூவாய் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் அறிமுகம்.! விலை?
ஹூவாய் நிறுவனம் தனது புதிய நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி (Vitality) எடிஷன் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் புதிய ஹவாய் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷனின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.25,130 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹூவாய் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் சாதனம் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல்கள், 20:9 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் 405 பிபி பிக்சல் அடர்த்தி போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் டைமன்சிட்டி 800 யு பிராசஸர் மற்றும் 8ஜி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல்ஸ்டோரேஜ் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் சில்வர் மூன் ஸ்டார், கிஜிஜ்ங் ஃபார்ஸ்ட் (க்ரீன்), மிட்நைட் பிளாக் மற்றும் மிட்சம்மர் பர்பிள் வண்ணங்களில் வருகிறது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

இந்த ஸமார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போனின் மொத்த அமைப்பும் ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. பின்பு 40 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான EMUI 10.1 மூலம் இயங்குகிறது நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன்.

இந்த சாதனம் 5ஜி மற்றும் 4ஜி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது, எனவே 5ஜி இல்லாத இடத்தில் 4ஜி ஆதரவைப் பயன்படுத்த முடியும். மேலும் வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1 எல்இ, ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5 டூயல் பேண்ட்), என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் டூயல் சிம் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டடில் 162.31 x 75.0 x 8.5 மிமீ மற்றும் 189 கிராம் எடையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications