விரைவில் களமிறங்கும் ஹூவாய் நோவா 6 5ஜி ஸ்மார்ட்போன்.!

|

ஹூவாய் நிறுவனம் விரைவில் தனது புதிய ஹூவாய் நோவா 6 5ஜி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுகளுடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் முதலில் சீனாவில் தான் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1080 x 2340 பிக்சல்

ஹூவாய் நோவா 6 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1080 x 2340பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹூவாய் நோவா 6 5ஜி கேமரா

ஹூவாய் நோவா 6 5ஜி கேமரா

ஹூவாய் நோவா 6 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 60எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. 32எம்பி +12எம்பி செல்பீ கேமரா கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக எல்இடி பிளாஸ்,
செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

சம்பளம்: ரூ.1 லட்சம்., வேலை: தூக்கம்: விவரம் மற்றும் வேலை லிங்க் உள்ளேசம்பளம்: ரூ.1 லட்சம்., வேலை: தூக்கம்: விவரம் மற்றும் வேலை லிங்க் உள்ளே

 8ஜிபி ரேம்

விரைவில் வெளிவரும் இந்த ஹூவாய் நோவா 6 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்தவதற்கு அருமையாக இருக்கும்.

 990 5ஜி சிப்செட் வசதி

ஹூவாய் நோவா 6 5ஜி சாதனத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிண் 990 5ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு மென்பொருள் வசதிகள் மற்றும் புதிய செயலிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆனாது வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்எப்சி

ஹூவாய் நோவா 6 5ஜி சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 40வாட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. பின்பு வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியள்ளது.

 3,499 யுவான்

மேலும் இந்த ஹூவாய் நோவா 6 5ஜி சாதனத்தின் ஆரம்ப விலை 3,499 யுவான் எனத் தகவல் வெளிவந்தவண்ணம் உள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Huawei Nova 6 5G official renders show dual punch-hole screen : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X