Home
Mobile

32எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஹுவாய் நோவா 4இ.!

ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதிக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் அன்மையில் புதிய விவோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த விவோ 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவோ நிறுவனத்திற்கு போட்டியாக 32எம்பி செல்பீ கேமராவுடன் ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஹுவாய் நிறுவனம்.

32எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஹுவாய் நோவா 4இ.!

மேலும் விவோ நிறுவனத்தை விட உயர்இறுதி கொண்ட சிப்செட் அம்சத்தை ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போனில் பொறுத்த திட்டமிட்டுள்ளது ஹுவாய் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.

ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போனின் மாடல் எண் MAR-TL00 / MAR-AL00. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.15-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும்
18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

32எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஹுவாய் நோவா 4இ.!

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, பின்பு பின்புறம் மூன்று கேமரா பொறுத்தப்பட்டு இந்த ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

32எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஹுவாய் நோவா 4இ.!

ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதிக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹீலியோ பி70 2.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் உடன் மாலி ஜி72 ஜிபியு வசதி இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ யுஸ்பி ,போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Huawei Nova 4e teaser confirms 32MP selfie camera: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X