டிரிபிள் கேமராவுடன் களமிறங்கும் ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் விபரங்கள்.!
ஹு வாய் நிறுவனம் வரும் மார்ச் 14 ஆம் தேதி, அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஹுவாய் நோவா 4இ மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவுள்ளது.
ஹு வாய் நிறுவனம் வரும் மார்ச் 14 ஆம் தேதி, அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஹுவாய் நோவா 4இ மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவுள்ளது. முன்னரே ஹுவாய் நோவா 4இ பற்றிப் பல விபரங்கள் வலைத்தளங்களில் லீக் ஆகி உள்ள நிலையில், தற்பொழுது ஹுவாய் நோவா 4இ இன் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.

ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன்
ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன், வாட்டர் நாட்ச் டிஸ்பிளேயுடன் கூடிய முன்பக்க கேமராவுடன் அறிமுகம் செய்யத் தயாராகவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா சேவையுடன் கூடிய எல்.இ.டி பிளாஷ் மற்றும் பிங்கர் சென்சாருடன் களமிறங்குகிறது.

மூன்று நிறங்களில்
ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன், மூன்று நிறங்களில் விற்பனைக்கு வருகிறதென்ற தகவல்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் கார்னெட் ப்ளூ, மேஜிக் நைட் மற்றும் பேர்ல் வைட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா
ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் இல் 24 மெகா பிக்சல் கேமரா, 8 மெகா பிக்சல் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கேமராவுடன் சேர்த்து பிண்ணப்பக்கம் டிரிபிள் கேமரா சேவையுடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள 2 மெகா பிக்சல் கேமரா வைடு அங்கிள் லென்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர் வெளியிடப்பட்ட லீக்
முன்னர் வெளியிடப்பட்ட லீக்களின் படி, ஹுவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் 6.15' இன்ச் முழு எச்.டி பிளஸ் எல்.சி.டி டில்பே, கிரீன் 710 சிப்செட் மற்றும் 6 ஜிபி கொண்ட ரேம் சேவை அத்துடன் 128 ஜிபி வரையிலான உள்ளடக்கச் சேமிப்புடன் 3340 எச்.ஏ.எச் பேட்டரியுடன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications