Home
Mobile

கற்பனைக்கு எட்டாத டிஸ்பிளே அளவில் ஹூவாய் நோவா 3இ (விலை & அம்சங்கள்).!

அக்வா-கோர் கிரீன் 659 எஸ்ஓசி உடனாக 4ஜிபி ரேம் கொண்டு இயங்கும்.

By Muthuraj

பிளாக், ப்ளூ, மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய வண்ண விருப்பங்களில், ஹூவாய் நோவா 3இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது, கடந்த வாரம் போலந்து மற்றும் செக் குடியரசு ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூவாய் பி20 லைட் மற்றொரு மாறுபாடாகும்.

இதன் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாதிரியானதுப சுமார் ரூ.20,600/- என்றும், மறுகையில் உள்ள 128ஜிபி சேமிப்பு மாறுபாடானது சுமார் ரூ. 22,600/- என்றும் விலை நிர்ணயம் பெற்றுள்ளன. முன்பதிவுகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ள இவ்விரு வகைகளும் வருகிற மார்ச் 27 முதல் சீனாவில் வாங்க கிடைக்கும். சீனா தவிர வேறு சந்தைகளில் நோவா 3இ எப்போதுஅறிமுகமாகும் என்பது பற்றிய வார்த்தைகள் இல்லை. எனினும் இக்கருவியின் முழுமையான அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஹூவாய் நோவா 3இ அம்சங்கள்

இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்டுள்ள ஹூவாய் நோவா 3இ ஆனது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான இஎம்யூஐ 8.0 கொண்டு இயங்குகிறது மற்றும் 19: 9 விகிதம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் கூடிய 5.84 அங்குல முழு எச்டி+ (1080x2280 பிக்ஸல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது.

அக்வா-கோர் கிரீன் 659 எஸ்ஓசி உடனாக 4ஜிபி ரேம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது முன்பக்கத்தை பொறுத்தமட்டில் ஒரு 24 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்576 சென்சார் கொண்டுள்ளது.

உள்ளடக்க சேமிப்பை பொறுத்தமட்டில், ஹூவாய் நோவா 3இ ஆனது 64ஜிபி மற்றும் 128ஜிபி அளவிலான மாறுபாடுகளில் வெளிவரும். இரண்டு மாதிரிகளும் ஒரு கலப்பு கட்டமைப்பிலான மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்கும்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?

இதர அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் ஒரு கைரேகை சென்சார், 4ஜி, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி மற்றும் ஒரு 3.5 ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. இறுதியாக, இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Huawei Nova 3e With 5.84-Inch 19:9 Display Launched: Price, Specifications. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X