Home
Mobile

4 கேமராக்கள் + கிரின் 960 எஸ்ஓசி உடன் சிக்கிய ஹூவாய் நோவா 2எஸ்.!

ஹூவாய் நிறுவனத்தின் துணை-பிராண்ட் ஆன ஹானர் நிறுவனம் தனது சமீபத்திய தலைமை சாதனமான ஹானர் வி10 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது.

By Muthuraj

ஹூவாய் நிறுவனத்தின் துணை-பிராண்ட் ஆன ஹானர் நிறுவனம் தனது சமீபத்திய தலைமை சாதனமான ஹானர் வி10 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது.

அதனை தொடர்ந்து இப்போது ஹூவாய் நிறுவனம், மற்றொரு ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என்பதை சமீபத்தில் வெளியாகியுள்ள ஹூவாய் நோவா 2எஸ் ஸ்மார்ட்போனின் லீக்ஸ் புகைப்படங்களின் வழியாக அறிய முடிகிறது. சுவாரசியம் என்னவென்றால், வெளியான லீக்ஸ் புகைப்படத்தில் உள்ள கருவியானது வி10 ஸ்மார்ட்போனின் முழு திரை வடிவமைப்பை ஒத்துள்ளது.

நோவா 2 மற்றும் நோவா 2 பிளஸ்

நோவா 2 மற்றும் நோவா 2 பிளஸ்

ஹூவாய் நோவா 2 மற்றும் நோவா 2 பிளஸ் என்கிற ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமானது. எல்இடி ப்ளாஷ் உடனான 12 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என்கிற இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ள அக்கருவிகளின் அடுத்தகட்ட அப்டேட் சாதனமாக ஹூவாய் நோவா 2எஸ் வெளியாகலாம்.

முழு திரை டிஸ்பிளே

முழு திரை டிஸ்பிளே

சமீபத்திய ஹூவாய் நோவா 2எஸ் லீக்ஸ் புகைப்படங்களின்படி, இக்கருவியும் இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டு வரும் என்று காட்டுகிறது. மேலும் கிஸ்மோசீனா வழியாக வெளியான படங்களானது, இக்கருவி ஒரு 18: 9 என்கிற திரைவிகிதத்திலான - அதாவது வி10 ஸ்மார்ட்போன் போன்றே - முழு திரை டிஸ்பிளே கொண்டிருக்கும் என்கிறது.

6 ஜிபி ரேம்

6 ஜிபி ரேம்

முன்-ஏற்றப்பட்ட கைரேகை ரீடர் அம்சத்துடன் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படும் ஹூவாய் நோவா 2எஸ் கருவியின் எதிர்பார்க்கப்டும் அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 6 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்கலாம். மேலும் இயக்கருவி கிரின் 960 எஸ்ஓசி உடனான 6 ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படலாம.

இரட்டை பின்புற கேமரா

இரட்டை பின்புற கேமரா

மேலும் இந்த சாதனம் க்வாட் கேமராக்களை தன்னுள் கொண்டிருக்கலாம். அதாவது இதன் இரட்டை பின்புற கேமரா அமைப்பானது - 20 மெகாபிக்சல் மற்றும் 16 மெகாபிக்சல் சென்சார்களின் கலவையாக இருக்கும். மறுபக்கம் 20 மெகாபிக்சல் சென்சார்கள் என்கிற ஒரு இரட்டை கேமரா அமைப்பு இருக்கும்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்க முறைமை அடிப்படையிலான இஎம்யூஐ 8.0 கீழ் மூடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது முக அடையாள அம்சம் மற்றும் என்எப்சி ஆகியவைகளை தன்னுள் பொருத்தப்பட்டு வெளிவரலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரையில், ஹூவாய் நோவா 2எஸ் ஆனது 2,999 யுவான் (அதாவது 454 அமெரிக்க டாலர்கள்) என்கிற விலைப்புள்ளியை எட்டலாம் மற்றும் டிசம்பரில் அறிமுகமாகலாம்.

நோவா 3

நோவா 3

இதற்கு முன்னர் வெளியான நோவா தொடரின் அடுத்த தலைமுறை கருவியான நோவா 3 ஸ்மார்ட்போனின் பல்வேறு கோணங்களிலான புகைப்படங்கள் வெளியாகின. வெளியான புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் உயரமான காட்சி ஆகியவற்றை காண முடிகிறது. இதன் அர்த்தம் இந்த ஸ்மார்ட்போன் 18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்பிளே அளவை கொண்டிருக்கும்.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

கருவியின் முன்னணி பேனலில் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா, இயர்பீஸ் மற்றும் ஒரு எல்இடி ப்ளாஷ் ஆகியவைகளை தெளிவாக காண முடிகிறது. பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் ஏதுமில்லை என்பதால் அதன் ஹோம் பொத்தானே ​​ஒரு கைரேகை சென்சார் செயல்பட முடியும்.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

பின்புறத்தை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு இரட்டை கேமரா அமைப்பு காணப்படுகிறது. உடன் ஆன்டெனா பட்டைகள் மேல் மற்றும் கீழ் பலகத்தில் இயங்குகிறது. மேலும் ஒரு ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாகே அளவிலான மைக்ரோஃபோனையும் கொண்டுள்ளது.

5.60 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே

5.60 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே

அதே சமயம் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஒரு ஸ்பீக்கர் கிரில் ஆகியவைகளையும் உள்ளது. புகைப்படத்தில் முன் மற்றும் பின்புறத்தில் வளைவான விளிம்புகளையும் கவனிக்கலாம். முந்தைய லீக்ஸ் தகவலின்கீழ், சில முக்கிய குறிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யும் வகையில் ஹூவாய் நோவா 3 ஆனது ஒரு 5.60 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே (2160 x 1080 பிக்சல்கள் தீர்மானம்; 18: 9 விகிதம்) கொண்டிருக்கலாம். மேலும் இது புதிய கிரின் 670 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும்.

மொத்தம் நான்கு கேமராகள்

மொத்தம் நான்கு கேமராகள்

பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டிருக்கலாம். 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரேம் கொண்ட 3 ஜிபி என இரண்டு சேமிப்பு மாதிரிகளில் வெளிவரலாம். நோவா 2 மற்றும் நோவா 2ஐ போன்றே இக்கருவியும் மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுவரலாம் என கூறப்படுகிறது.

3340எம்ஏஎச் பேட்டரி

3340எம்ஏஎச் பேட்டரி

அதாவது பின்புறத்தில் ஒரு 16 மெகாபிக்சல் மற்றும் 20 மெகாபிக்சல் என்ற இரட்டை கேமரா அமைப்பு மற்றும் முன்பக்கம் 20 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற இரட்டை கேமரா அமைப்பு விளையாடலாம். மேலும் இந்த பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 3340எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படலாம். இது அண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட இஎம்யூஐ கொண்டு இயங்கலாம்.

Best Mobiles in India

English summary
Huawei Nova 2s leaked, shows four cameras and Kirin 960 SoC. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X