6-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹவாய் நோவா 2எஸ் அறிமுகம்.!
ஹவாய் நோவா 2எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹவாய் நோவா 2எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஹவாய் நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் நான்கு கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. பிளாக், கிரே, ரெட், ரோஸ் தங்கம் மற்றும் ப்ளூ போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ஹவாய் நிறுவனத்தின் ஹவாய் நோவா 2எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கைரேகை ஸ்கேனர் போன்ற பல இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஹவாய் நோவா 2எஸ் :
ஹவாய் நோவா 2எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
ஹவாய் நோவா 2எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரின் 960 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இரட்டை பின்புற கேமரா :
இரட்டை பின்புற கேமரா அமைப்பானது - 20 மெகாபிக்சல் மற்றும் 16 மெகாபிக்சல் சென்சார்களின் கலவையாக உள்ளது, அதன்பின்பு இதனுடைய டூயல் செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
ஹோம் பட்டன், கைரேகை ஸ்கேனர், வைபை802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
ஹவாய் நோவா 2எஸ் ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
ஹவாய் நோவா 2எஸ் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி முறையே ரூ.26,345-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி முறையே ரூ.29,273-என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications