ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியுடன் ஹூவாய் நோவா 2 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூவாய் நோவா 2 லைட் ஸ்மார்ட்போன் மாடலை பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது ஹூவாய் நிறுவனம். மேலும் டூயல் கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூவாய் நோவா 2 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹூவாய் நோவா 2 லைட்:
ஹூவாய் நோவா 2 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 11440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
ஹூவாய் நோவா 2 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

3ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3000எம்ஏஎச்:
ஹூவாய் நோவா 2 லைட் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.12,500-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications