Home
Mobile

இவன் வேற மாதிரி.. மிட்-ரேஞ்ச்ல 60MP செல்பீ.. OLED டிஸ்பிளே.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் 60 எம்பி செல்பீ கேமரா மட்டுமல்லாமல், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஓஎல்இடி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் ஹூவாய் நோவா 13 (HUAWEI nova 13) போன் வெளியாகி இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ஏஐ சார்ஜிங் கன்ட்ரோல், ஏஐ எக்ஸ்பிரஷன் போட்டோ, எக்ஸ்டி போர்ட்ராய்டு என்ஜின், ஏஐ எச்டிஆர் போன்ற பிரத்யேக டெக்னாலஜிகளையும் கொடுக்கிறது. இந்த ஹூவாய் நோவா 13 போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஹூவாய் மாடலானது, இப்போது குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. யுஏஈ மார்கெட்டில் ஜனவரி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி இருப்பதால் மற்ற நாடுகளிலும் இந்த ஹூவாய் நோவா 13 போனுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இப்போது பீச்சர்களை பார்ப்போம்.

இவன் வேற மாதிரி! மிட்-ரேஞ்ச்ல 60MP செல்பீ.. OLED டிஸ்பிளே.. எந்த போன்?

ஹூவாய் நோவா 13 அம்சங்கள் (HUAWEI nova 13 Specifications): இந்த ஹூவாய் போனின் கேமராவில் எக்ஸ்டி போர்ட்ராய்டு என்ஜின் (XD Portrait Engine), ஏஐ பெஸ்ட் எக்ஸ்பிரஷன் (AI Best Expression) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. 50 எம்பி அல்ட்ரா விஷன் மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு மேக்ரோ கேமரா + போகஸ் சென்சார் கிடைக்கிறது.

இதுபோக கலர் டெம்பரேச்சர் சென்சார் (Colour Temperature Sensor) சப்போர்ட் உள்ளது. 4K சப்போர்ட் கொண்ட 60 எம்பி அல்ட்ரா வைடு செல்பீ கேமரா கிடைக்கிறது. மேலும், ஆட்டோ போகஸ் மோட் (Autofocus Mode), ஏஐ இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (AI image Stabilization) மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது. ப்ளோ போகஸ் (Follow Focus) பீச்சர் உள்ளது.

இதுபோக, போர்ட்ராய்டு வீடியோ (Portrait Video), ஆடியோ கன்ட்ரோல் (Audio Control) மற்றும் ஷார்ட்-பார்ம் வீடியோ (Short-Form Video) போன்ற கேமரா பீச்சர்களும் இருக்கின்றன. இதைபோலவே டிஸ்பிளே பீச்சர்களும் பிரீமியமாக இருக்கின்றன. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 6.7 இன்ச் (2412 × 1084 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது.

மேலும், 300Hz டச் சாம்பிளிங் ரேட், 1.07 பில்லியன் கலர் டெப்த் வருகிறது. இதுபோக 1440Hz PWD டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் ஏஐ எச்டிஆர் (AI HDR) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஹூவாய் நோவா 13 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன.

பேட்டரி பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. ஏஐ சார்ஜிங் டெம்பரேச்சர் கன்ட்ரோல் (AI Charging Temperature Control) டெக்னாலஜியுடன் 100W சூப்பர்சார்ஜிங் (SuperCharging) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சார்ஜிங்குக்கு 5000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், பேட்டரி சார்ஜிங் மற்றும் மேனேஜ்மென்ட் சப்போர்ட் உள்ளது. மூன்று கலர்களில் இருக்கிறது.

ஆகவே, இந்த ஹூவாய் நோவா 13 போனை லோடன் கிரீன் (Loden Green) மற்றும் ஒயிட் (White) கலர்களில் ஆர்டர் செய்யலாம். பிளாக் (Black) கலரும் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ஹூவாய் போனின் ஆரம்ப விலை ரூ,39,235ஆக இருக்கிறது. யுஏஐ மார்கெட்டில் ஜனவரி முதல் விற்பனைக்கு வருகிறது. அதற்கு பிறகு மற்ற நாடுகளில் வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HUAWEI nova 13 With 12GB RAM 60MP Front Camera Goes Global Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X