3,00,000 அப்ளிகேஷன் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

இப்படி பல சிறந்த வசதிகளை வழங்கும் ஹுவெய் நிறுவனம் புதிய மெர்குரி ஸ்மார்ட்போனை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எதிர் பார்க்கும் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளம் கொண்டது. இந்த ஓஎஸ் வேகமாக இயங்க 1.4 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இது எப்டபிள்யூவிஜிஏ தொடுதிரை வசதியையும் வழங்கும் 4 இஞ்ச் திரை வசதி கொண்டது. இது 3ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்.
இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே குறைவே இல்லாமல் புகைப்படத்தையும், வீடியோ வசதியினையும் பெற்று மகிழலாம். 8 மெகா பிக்ஸல் கேமரா அல்லாமல், இதில் விஜிஏ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருப்பதால் 3, 00,000 மேற்பட்ட அப்ளிக்கேஷன்களை ஆன்-லைனில் பெற முடியும். இதனால் நிறைய பயனுள்ள தொழில் நுட்பங்களை பெற்று பயனடையலாம். 2ஜிபி இன்டர்னல் மெமரி வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த மெமரி வசதி உள்ளதால் தகவலை சேகரிக்க
முடியும்.
ஹுவெய் மெர்குரி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக ஹாட்ஸ்பாட் வசதி கருதப்படுகிறது. இதனால் வைபை ஹாட்ஸ்பாட் வசதியினை பெறலாம். ஜி-மெயில், கூகுள் மேப்ஸ் போன்ற கூகுள் சேவைகளுக்கும் இந்த ஸ்மார்ட்போன் துணை புரிகிறது.
நிறைய வாடிக்கையாளர்கள் அதிக ஆற்றல் வாய்ந்த ஆன்ட்ராய்டு போன்களை குறைந்த விலையில் தேடுகின்றனர். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த ஹுவய் மெர்குரி ஸ்மார்ட்போன் சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த மதிப்பினை பெரும்.


Click it and Unblock the Notifications