5100எம்ஏஎச் பேட்டரியுடன் ஹுவாய் மீடியாபேட் எம்5 லைட் அறிமுகம்.!
இந்த டேப்லெட் சாதனத்தில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றுள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹுவாய் நிறுவனம் தனது மீடியாபேட் எம்5 லைட் என்று டேப்லெட் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று
தான் கூறவேண்டும்.

இந்திய விலைமதிப்பில்:
3ஜிபி ரேம் கொண்ட ஹுவாய் மீடியாபேட் எம்5 லைட் சாதனத்தின் விலை ரூ.12,300-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் கொண்ட ஹுவாய் மீடியாபேட் எம்5 லைட் சாதனத்தின் விலை ரூ.14,500-ஆக உள்ளது.

டிஸ்பிளே:
ஹுவாய் மீடியாபேட் எம்5 லைட் சாதனம் பொதுவாக 8-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டோ-கோர்:
ஹுவாய் மீடியாபேட் எம்5 லைட் சாதனத்தில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரிண் 710 12என்எம் பிராசஸர் உடன் ஏஆர்எம் மாலி-ஜி51 எம்பி4 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டுள்ளதால் இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
இந்த டேப்லெட் சாதனத்தில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றுள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
ஹுவாய் மீடியாபேட் எம்5 லைட் சாதனம் பொறுத்தவரை 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு,Harman Kardon குவாட்-ஸ்பீக்கர்கள் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது.

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்:
இந்த டேப்லெட் மாடலில் பாஸ்ட் சார்ஜ் வசதி கொண்ட 5100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை,
ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம்.


Click it and Unblock the Notifications