Home
Mobile

பிப்.18 குறிச்சாச்சு.. டிரிபிள் போல்ட் OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5600mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. எந்த போன்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படி மூன்று டிஸ்பிளேவுடன் களமிறங்கிய ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் (HUAWEI Mate XT Ultimate Design) போனின் குளோபல் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. 10.2 இன்ச், 7.9 இன்ச் மற்றும் 6.4 இன்ச் என்று மூன்று போல்டபிள் கொடுக்கும், இந்த ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் போனின் முழு பீச்சர்கள, குளோபல் வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் அம்சங்கள் (HUAWEI Mate XT Ultimate Design Specifications): இந்த போனின் டிஸ்பிளே பீச்சர்களே உங்களை மிரளவிடும்படி இருக்கின்றன. அதாவது, போல்ட் செய்யப்பட்ட பிறகு, 6.4 இன்ச் (2232 × 1008 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளேவை பயன்படுத்தலாம். டபுள் அன்-போல்ட் செய்தால் 7.9 இன்ச் (2232 × 2048 பிக்சல்கள்) டிஸ்பிளே கிடைக்கிறது.

பிப்.18 குறிச்சாச்சு.. டிரிபிள் போல்ட் OLED டிஸ்பிளே.. 16GB ரேம் போன்!

டிரிபிள் அன்-போல்ட் செய்தால், டேப்லெட்களுக்கு நிகராக 10.2 இன்ச் (2232 × 3184 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளேவை பயன்படுத்தலாம். மூன்று டிஸ்பிளேக்களிலும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 1440Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது. யுடிஜி கிளாஸ் (UTG Glass) புரொடெக்சன் வருகிறது.

லெதர் பேக் பேனல் டிசைனில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. 10.2 இன்ச் டிஸ்பிளேவுக்கு ஏற்ப போல்டபிள் டச் கீபோர்ட் (Foldable Touch Keyboard) கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இருக்கின்றன. 8 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.

ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கிடைக்கிறது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் 12 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஆகவே, 5.5X ஆப்டிகல் ஜூமிங் இருக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் உள்ளது.

இந்த ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் போனில் ஹர்மோனிஓஎஸ் 4.2 (HarmonyOS 4.2) கிடைக்கிறது. மூன்று டிஸ்பிளேவை கொண்டிருப்பதால், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) பொதுவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் பெரிய டிஸ்பிளேவுக்கு பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (Wired Fast Charging) கிடைக்கிறது.

இதுபோக 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (Wireless Fast Charging) சப்போர்ட் கொண்ட 5600mAh பேட்டரி கிடைக்கிறது. டிரிபிள் அன்-போல்ட் செய்யும்போது, 3.6 மீமீ அல்ட்ரா ஸ்லிம் பாடி கொடுக்கிறது. அதுவே, டபுள் அன்-போல்டில் 4.75 மிமீ தடிமனும், சிங்கிள் போல்ட் செய்யப்பட்ட பிறகு 7.45 மிமீ தடிமனிலும் பாடி இருக்கிறது. 298 கிராம் எடை கொண்டிருக்கிறது.

இந்த ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் போன் சீனாவில் வெளியாகிவிட்டது. இப்போது, குளோபல் மார்கெட்டில் களமிறங்குகிறது. வரும் பிப்ரவரி 8ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் இன்வென்ட்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. அப்போது, குளோபல் மாடலின் விலை விவரங்கள் தெரியவரும். சீனாவில் ரூ.2,35,910 ஆக ஆரம்ப விலை இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HUAWEI Mate XT Ultimate Design With Tri-fold To Launch Globally on February 18 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X