Home
Mobile

ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. மறுபடியும் அவமானப்பட்ட Samsung.. மாஸ் ப்ரொடெக்ஷனில் Huawei 10.2-இன்ச் போன்!

சாம்சங் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு அவமானம் ஏற்பட்டு உள்ளது. ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பிரிவில் ஜாம்பவானாக திகழும் சாம்சங் நிறுவனம் ஆனது இன்னும் அதன் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனையே அறிமுகம் செய்யவில்லை, இன்னும் சொல்லப்போனால் இன்னும் அதிகாரபூர்வமாக கூட அதை அறிவிக்கவில்லை (வெறும் லீக்ஸ் தான் வெளிவந்துள்ளன)

இந்நிலைப்பாட்டில், ஹூவாய் நிறுவனமானது அதன் இரண்டாவது ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இம்முறை இது உலகளவில் அறிமுகம் செய்யப்படுவதாக "மாஸ் ப்ரொடெக்ஷனை" சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக உலகின் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிறுவனம் என்கிற பெயரை ஹூவாய் பெற்றபோது - சாம்சங் நிறுவனம் முதல் அவமானத்தை சந்தித்தது.

ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. மறுபடியும் அவமானப்பட்ட Samsung!

இப்போது ஹூவாய் மேட் எக்ஸ்டி 2 (Huawei Mate XT 2) ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது என்கிற தகவல் - சாம்சங் நிறுவனத்திற்கான இரண்டாவது அவமானம் ஆக கருதப்படுகிறது. ஹூவாய் மேட் எக்ஸ்டி 2 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில், டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, ஹவாய் மேட் எக்ஸ்டி 2 ஸ்மார்ட்போன் ஆனது ஒரிஜினல் ஹவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைனை (ஹூவாய் நிறுவனத்தின் முதல் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போனை) போல வெறும் 2 கலர்களில் (டார்க் பிளாக் மற்றும் ரூய் ரெட்) மட்டுமின்றி பிளாக், பர்பிள், ரெட் மற்றும் ஒயிட் கலர்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த டிப்ஸ்டரின் கூற்றுப்படி, இது உலகின் இரண்டாவது பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போனாக இருக்கும். அதாவது இது அதன் முன்னோடியை விட அதிக விற்பனையை இலக்காக கொண்டு, உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தைக்கு வருமா என்பதை இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் ஹவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் மட்டுமே அறிமுகமானது.

ஹவாய் மேட் எக்ஸ்டி2 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- முதல் மாடலில் உள்ள அதே டிஸ்பிளே மற்றும் பேட்டரியை தக்கவைத்து கொள்ளலாம்
-முதல் மாடலில் கிடைக்கும் கிரின் 9010 சிப்செட்டை விட மேம்படுத்தப்பட்ட புதிய கிரின் 9020 சிப்செட் உடன் வரலாம்
- செயற்கைக்கோள் இணைப்பை ஆதரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது
- புதிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமராவைக் கொண்டிருக்கலாம்
- மேம்படுத்தப்பட்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸும் எதிர்பார்க்கப்படுகிறது.
- விலை ரூ.2,49,990 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முதல் மாடல் ஆன ஹூவாய் மேட் எக்ஸ்டி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது மொத்தம் 3 டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. முழுமையாக விரித்தால் இது 10.2-இன்ச் (3184 x 2232 பிக்சல்கள்) பிலெக்ஸிபிள் LTPO OLED டிஸ்பிலேவாக இருக்கும். அதை ஒருமுறை மடித்தால் 7.9-இன்ச் (2048 x 2232 பிக்சல்கள்) டிஸ்பிளேவாக மாறும். இரண்டாவது முறை மடித்தால் இது 6.4-இன்ச் திரை (10328 x 22308 x 2232, பிக்சல்கள்) டிஸ்பிளேவாக மாறும்.

கேமராக்களை பொறுத்தவரை, வெளிப்புறத்தில், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS - optical image stabilization) கொண்ட 50-மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 12-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (Ultra-wide camera) மற்றும் 12-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் (Periscope Telephoto camera) கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இது 66W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei Mate XT 2 will be Worlds second mass produced tri fold smartphone Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X