மொத்த மார்கெட்டும் இதுக்கு சல்யூட்.. 4.5 மிமீ ஸ்லிம்.. 5525mAh பேட்டரி.. 8 இன்ச் டிஸ்பிளே.. 20 ஜிபி ரேம்!
ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களையே தூக்கி சாப்பிடும்படியான டிசைன் மற்றும் பீச்சர்களுடன் ஹூவாய் மேட் எக்ஸ்7 (HUAWEI Mate X7) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. போல்டபிள் டிசைனில் வெறும் 4.5 மிமீ தடிமன் மட்டுமே வருகிறது. இதில் 5525mAh பேட்டரி, 8 இன்ச் மெயின் டிஸ்பிளே, 6.49 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே கொடுக்கிறது. இந்த ஹூவாய் ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஹூவாய் மேட் எக்ஸ்7 முக்கிய அம்சங்கள் (HUAWEI Mate X7 Specifications): இந்த ஹூவாய் ஸ்மார்ட்போனில் கிரின் 9030 ப்ரோ (Kirin 9030 Pro) சிப்செட் மற்றும் ஹர்மோனிஓஎஸ் 6.0 (HarmonyOS 6.0) கிடைக்கிறது. இந்த சிப்செட் 12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் வேரியண்ட்களுடன் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கிறது. 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 8 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

இதில் 2416 x 2210 பிக்சல்கள் ரெசொலூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 1440Hz ஹை-பிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் பெற்று கொள்ளலாம். 6.49 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவானது, 3டி குவாட் கர்வ்ட் டிசைனை கொண்டுள்ளது. 2444 x 1080 ரெசொலூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
மேலும், 1440Hz ஹை-பிரிகொன்சி பிடபுள்எம் டிம்மிங் கிடைக்கும். இந்த டிஸ்பிளேவானது 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இரண்டாவது ஜெனரேஷன் பாசால்ட் டெம்ப்பர்ட் குன்லுன் கிளாஸ் (Basalt Tempered Kunlun Glass) பாதுகாப்பை கொடுத்து இருக்கிறது. இந்த ஹூவாய் மேட் எக்ஸ்7 கேமராவை பொறுத்தவரையில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 40 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.
50 மெகா பிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. பிரைமரி கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் தொழில்நுட்பம் கிடைக்கிறது. டெலிபோட்டோ கேமராவில் 100X ஜூமிங்குடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் தொழில்நுட்பம் கிடைக்கிறது. மேலும், 1.5 மெகாபிக்சல் மல்டி-ஸ்பெக்ஸ்ட்ரல் ரெம் மேப்பிள் பிரைமரி கலர் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் டெலிபோட்டோ மேக்ரோ (Telephoto Macro) சப்போர்ட் கிடைக்கிறது. 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த ஹூவாய் மேட் எக்ஸ்7 ஸ்மார்ட்போனுக்கு சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் ஐபிஎக்ஸ்8 ரேட்டிங் (IPX8 Rating) கொடுக்கும்படி ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Splash Resistant) கிடைக்கிறது. 5525mAh பேட்டரியை கொடுக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் கலெக்டர்ஸ் எடிஷன் இருக்கிறது. இதில் 5600mAh பேட்டரி கிடைக்கிறது. 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. அன்போல்டு செய்தால் 4.5 மிமீ தடிமன் மட்டுமே வருகிறது. 236 கிராம் எடை கொடுக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,63,278ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,75,839ஆகவும் இருக்கிறது.
16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் (கலெக்டர்ஸ் எடிஷன்) விலை ரூ.1,88,400ஆக இருக்கிறது. இதே கலெக்டர்ஸ் எடிஷனில் ஸ்டைலஸ் உடன் கிடைக்கும் 20 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.2,21,042ஆக இருக்கிறது. இந்த சீன மார்கெட்டின் விலையாகும். இப்போது ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. டிசம்பர் 5ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. குளோபல் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








