Home
Mobile

மிரட்டிவிட்டாப்ல.. 7.93 இன்ச் டிஸ்பிளே.. 100X ஜூம்.. 5110mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

7.93 இன்ச் மெயின் டிஸ்பிளே, 6.45 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே ஒரே போனில் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதிலும் 12 ஜிபி ரேம், 5110mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 50 எம்பி ஓஐஎஸ் கேமரா, 48 எம்பி டெலிபோட்டோ கேமரா, 100x ஜூமிங் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களும் வந்தால் சொல்லவா வேண்டும், ஒட்டுமொத்த போல்டபிள் போன்களையும் தூக்கி சாப்பிடும் விதமாக இருக்குத்தான் செய்யும். அப்படியான ஹூவாய் மேட் எக்ஸ்6 (HUAWEI Mate X6) குளோபல் மார்கெட்டுக்கு வந்துள்ளது.

சீன மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற இந்த ஹூவாய் மேட் எக்ஸ்6 போன் யுஏஈ (UAE) மார்கெட்டில் ஆர்டருக்கு வந்ததன் மூலம் குளோபல் வெளியீட்டை செய்துள்ளது. ஆகவே, மற்ற நாடுகளிலும் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். போல்டபிள் போன்களுக்கு இந்திய மார்கெட்டிலும் வரவேற்பு இருப்பதால், இது கவனம் பெற்று இருக்கிறது.

மிரட்டிவிட்டாப்ல.. 7.93 இன்ச் டிஸ்பிளே.. 100X ஜூம்.. 5110mAh பேட்டரி!

ஹூவாய் மேட் எக்ஸ்6 அம்சங்கள் (HUAWEI Mate X6 Specifications): இந்த ஹூவாய் போனில் டேப்லெட்டுக்கு நிகரான மெயின் டிஸ்பிளே வருகிறது. அதாவது, அன்போல்டு செய்யும்போது, 7.93 இன்ச் (2440 × 2240 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) இன்னர் டிஸ்பிளேவை பயன்படுத்தபடுத்தலாம். இந்த மெயின் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

மேலும், 1440Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதுவே போல்டு செய்துவிட்டால், வழக்கமான 6.45 இன்ச் (2440 × 1080 பிக்சல்கள்) ஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவை பயன்படுத்தலாம். இந்த டிஸ்பிளே 3டி கர்வ்ட் டிசைனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஆகவே, டேப்லெட் டிஸ்பிளே மற்றும் மொபைல் டிஸ்பிளே என்று 2 டிஸ்பிளேவை பெற்று கொள்ளலாம். போல்டபிள் போனாக இருப்பதால் டிஸ்பிளேவுக்கு மட்டும் பிரீமியம் பீச்சர்கள் இருக்கும் மற்ற பீச்சர்கள் ஓரளவுக்குத்தான் இருக்கும் என்று இந்த ஹூவாய் மேட் எக்ஸ்6 போனில் சொல்லிட முடியாது. குவாட் கேமரா செட்டப்பில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொடுத்துள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 40 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 48 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 1.5 அல்ட்ரா குரோமா கேமரா கொண்டிருக்கிறது. டெலிபோட்டோ மற்றும் மெயின் கேமராவில் ஆப்டிகல்-இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) அவுட்புட் வருகிறது. மேலும், டெலிபோட்டோவில் 100X டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம்.

8 எம்பி இன்னர் கேமரா வருகிறது. அதாவது, மெயின் டிஸ்பிளேவில் இந்த கேமரா கிடைக்கிறது. இந்த ஹூவாய் மேட் எக்ஸ்6 போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு ஏஓஎஸ்பி (Android AOSP) பேஸ்டு ஹூவாய் நிறுவனத்தில் ஈஎம்யுஐ 15.0 (EMUI 15.0) கிடைக்கிறது. கிரின் 9020 சிப்செட் இருக்க வாய்ப்புள்ளது.

IPX8 ரெசிஸ்டன்ட் மற்றும் 5110mAh பேட்டரி வருகிறது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. யுஏஈ மார்கெட்டில் இந்த ஹூவாய் மேட் எக்ஸ்6 போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,66,340ஆக இருக்கிறது. இப்போது, ஆர்டருக்கு வந்துள்ளது. நெபுலா ரெட் அல்லது நெபுலா கிரே கலரில் ஆர்டர் செய்யலாம். பிளாக் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HUAWEI Mate X6 With 12GB RAM 50MP Camera Foldable Display Goes Global Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X