5.93-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் மேட் எஸ்இ அறிமுகம்.
ஹூவாய் மேட் எஸ்இ ஸ்மார்ட்போனில் 16எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
அமெரிக்காவில் ஹூவாய் மேட் எஸ்இ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஹூவாய் நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை 229.99 டாலர்கள் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது, இந்திய விலை மதிப்பில் ரூ.15,000 ஆகும். மேட் எஸ்இ சாதனம் பொதுவாக சாம்பல் மற்றும் தங்க நிறங்களை கொண்டு வெளிவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஹூவாய் மேட் எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல், மேலும் டூயல் ரியர் கேமரா அமைப்பு, கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட் எஸ்இ :
நோக்கியா 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.93-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஹைசிலிகான் கிரின்:
ஹூவாய் மேட் எஸ்இ ஸ்மார்ட்போனில் ஹைசிலிகான் கிரின் 659 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
ஹூவாய் மேட் எஸ்இ ஸ்மார்ட்போனில் 16எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, கைரேகை ஸ்கேனர், டூயல்-சிம் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


3340எம்ஏஎச்:
ஹூவாய் மேட் எஸ்இ ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் எடைப் பொறுத்தவரை 165 கிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








