Home
Mobile

யார்டா இவன் முரட்டு பீஸ்-ஆ இருக்கான்.. 20GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்.. இந்த மாதம் அறிமுகம்.. எந்த மாடல்?

விர்ச்சுவல் ரேம் அம்சத்துடன் சேர்த்து 12ஜிபி ரேம் வழங்கினாலே அந்த ஸ்மார்ட்போன் - மொபைல் மார்க்கெட்டில் டிமாண்ட்-ஐ உண்டாக்கும். ஹுவாய் நிறுவனமானது "இன்னும் ஒருபடி மேலே அல்ல.. இன்னும் பல படிகள் மேலே சென்று" 20ஜிபி ரேம் (20GB RAM ) உடனான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

அது இந்த மாதம் வெளியாகவுள்ள ஹூவாய் மேட் 80 சீரீஸின் (Huawei Mate 80 Series) கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிர்து. சீனாவில் இருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட் ஆனது மேட் 80 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது மிகப்பெரிய 20ஜிபி ரேம் உடன் அனுப்பப்படலாம் என்கிறது.

20GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்.. இந்த மாதம் அறிமுகம்.. எந்த மாடல்?

தற்போது, ​​பெரும்பாலான பிரீமியம் ஆண்ட்ராய்டு போன்கள் 12ஜிபி முதல் 16ஜிபி வரையிலான ரேம்-ஐ மட்டுமே கொண்டுள்ளன; அவைகள் கேமிங் டிவைஸ்களாக இருந்தாலும் கூட 16ஜிபி தான் அதிகபட்சம். 20ஜிபி ரேம் என்பது மெயின் ஃபிளாக்ஷிப்களுக்கு முற்றிலும் அறியப்படாத ஒரு அம்சம் ஆகும். ஆனால் ஹூவாய் மேட் 80 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் இது யதார்த்தமாக உள்ளது.

ஹூவாய் மேட் 80 சீரிஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? இந்த சீரீஸில் நான்கு மாடல்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது: ஸ்டாண்டர்ட் ஹூவாய் மேட் 80, ஹூவாய் மேட் 80 ப்ரோ, புதிய ஹூவாய் மேட் 80 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஹூவாய் மேட் 80 மேட் 80 ஆர்எஸ் மாஸ்டர் எடிஷன்.

மைடிரைவர்ஸின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த சீரீஸின் ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது ப்ரோ பிளஸ் என்கிற பெயரை பெறலாம். மேலும் இந்த மாற்றம் பிராண்டிங்கை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இது வழக்கமான ப்ரோ மாடலில் இருந்து தெளிவான பிரிவை (மேம்பாடுகளை) கொண்டிருக்கும். இருப்பினும் சரியான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

மேலும் ஹூவாய் நிறுவனம் அதன் மேட் 80 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான பில்ட்-இன் ஆக்டிவ் கூலிங் ஃபேனை சோதித்து வருவதாக ஆரம்பகால வதந்திகள் தெரிவிக்கின்றன. இதுதவிர்த்து இந்த சீரிஸ் முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு அப்கிரேட் - 3டி பேஸ் ரிகக்னைசேஷன் ஆக இருக்கலாம். ஹவாய் இதற்கு முன்பு இந்த அம்சத்தை அதன் பிரீமியம் மேட் வெர்ஷன்களில் பயன்படுத்தியுள்ளது. ஆனால் ஸ்டாண்டர்ட் மேட் மாடல் இதை பெறுவது இதுவே முதல் முறை ஆகும்

3டி பேஸ் ரிகக்னைசேஷன் உடன் சேர்ந்து இந்த சீரீஸ் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் அங்கீகாரத்தையும் ஆதரிக்கும் மற்றும் புதிய ரெட்-மேப்பிள் நிற கேமரா யூனிட் வடிவமைப்பையும் கொண்டிருக்கும். ஹூவாய் மேட் 80 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி அன்று சீனாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் 10000mAh பேட்டரி போன்: 20ஜிபி ரேம் என்கிற புதிய லிமிட்-ஐ தொட ஹூவாய் முயற்சிக்கும் மறுகையில் ஹானர் நிறுவனம் 10,000mAh பேட்டரி கொண்ட 2வது ஸ்மார்ட்போனில் பணியாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. முதலில் ஹானரின் 10,000mAh பேட்டரி ஆனது ஹானர் பவர் 2 (Honor Power 2) ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது ஹானர் நிறுவனம் அதன் 10,000mAh பேட்டரியை ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனில் மட்டுமல்ல ஹானர் ஜிடி 2 (Honor GT 2) ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்த உள்ளது. அதாவது இந்நிறுவனம் ஒரே நேரத்தில் 10,000mAh பேட்டரி கொண்ட இரண்டாவது ஸ்மார்ட்போனிலும் பணியாற்றுகிறது.

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி, இந்த இரண்டாவது மாடல் ஏற்கனவே சீனாவில் சோதனை உற்பத்திக்குள் நுழைந்துள்ளது. இதன் பேட்டரி 36.88Wh (9755mAh) என மதிப்பிடப்பட்டுள்ளது, இது சுமார் 9900mAh திறன் கொண்டது. மேலும் இறுதி செய்யப்பட்டவுடன் முழு 10,000mAh-ஐ கூட எட்டக்கூடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei Mate 80 Series Smartphones To Feature 20GB RAM Expect to Launch November 25 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X