மிரண்டு போவீங்க.. OLED டிஸ்பிளே.. 50X கேமரா.. 66W சார்ஜிங்.. 5300mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், 50x டிஜிட்டல் ஜூமிங் கொண்ட கேமரா, 2ஆவது ஜெனரேஷன் குன்லுன் கிளாஸ் புரொடெக்சன் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5300mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ஹூவாய் மேட் 70 (HUAWEI Mate 70) போன் வெளியாகி இருக்கிறது.
ஹூவாய் மேட் 70 அம்சங்கள் (HUAWEI Mate 70 Specifications): இந்த ஹூவாய் போனில் 6.7 இன்ச் (2688 x 1216 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2ஆவது ஜெனரேஷன் குன்லுன் கிளாஸ் (2nd Gen Kunlun Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.

இதுபோக, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1440Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 441 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் P3 கலர் காமட் பேக் செய்துள்ளது. ஆகவே, டிஸ்பிளேவில் ஓடிடி பிரியர்களுக்கு பிரீமியம் அவுட்புட் கிடைக்கும். ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா இருக்கிறது.
இந்த கேமராவுடன் 40 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 12 எம்பி பெரிஸ்கோப் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera Ssyetm) கிடைக்கிறது. இந்த ஹூவாய் மேட் 70 போனில் 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங், 5.5x ஆப்டிகல் ஜூமிங் (Optical Zooming) மற்றும் 50x டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், ஏஐ டைனாமிக் போட்டோ ( AI Dynamic Photo), ஏஐ போட்டோகிராபி மாஸ்டர் (AI Photography Master) போன்ற கேமரா பீச்சர்களும் வருகின்றன. இந்த ஹூவாய் மேட் 70 போனில் 3 மெமரி வேரியண்ட்கள் இருக்கின்றன. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் கிடைக்க இருக்கின்றன.
மேலும், 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் கிடைக்கிறது. ஹார்மோனி ஓஎஸ் 4.3 (HarmonyOS 4.3) வருகிறது. ஹார்மோனி ஓஎஸ் 5.0 (HarmonyOS 5.0) அப்கிரேட் கிடைக்க இருக்கிறது. சிப்செட் விவரங்கள் வெளியாகவில்லை. ஆகவே, ஹூவாய் நிறுவனத்தின் கிரின் 9100 6என்எம் (Kirin 9100 6nm) இடம்பெற வாய்ப்புள்ளது.
இந்த ஹூவாய் மேட் 70 போனின் பேட்டரி சிஸ்டம் அல்ட்ரா பிரீமியமாக இருக்கிறது. ஆகவே, 66W சூப்பர்சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. IP68 ரெசிஸ்டன்ட் வருவதால், 4 மீட்டர்கள் வரையில் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கும்.
அதேபோல IP69 ரெசிஸ்டன் மூலம் ஹை-பிரசர் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆடியோவை பொறுத்தவரையில், ஹூவாய் ஹைஸ்டன் (HUAWEI Histen) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. 7.8 மிமீ தடிமனில் ஸ்லிம் பாடி கொண்டிருக்கிறது. வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2,) கனெக்டிவிட்டி வருகிறது.
மேலும், பெய்டூ சாட்டிலைட் (Beidou Satellite) கனெக்டிவி்ட்டி உள்ளது. 256 ஜிபி மாடலின் விலை ரூ. 64,025ஆகவும், 512 ஜிபி மாடலின் விலை ரூ.69,850ஆகவும் இருக்கிறது. 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.81,490ஆ இருக்கிறது. சீனாவில் ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. டிசம்பர் 4ஆம் தேதி அந்த நாட்டில் விற்பனை தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications